சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்

  • கோவை: சட்டமன்ற தேர்தல் தோல்வி தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக அரசு செயல்பாடுகள் மீது ஆதரவும், விமர்சனங்களும் கலந்து வருகின்றன. முதலமைச்சர் விஜய் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்களை பேசினார். விஜய் தமிழகத்திற்கு தேவையான விஷயங்களை பேசாமல் திமுக சாதனைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விமர்சனம் செய்திருந்தார். "உதயநிதி சட்டமன்றத்திற்கே 11 மணிக்கு தான் வருவார். அவரெல்லாம் விஜயை விமர்சிக்க கூடாது" என்று காட்டமாக பதில் அளித்துள்ளார்.

    Advertisement

    கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மேட்டூர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழைக்குறைவாக இருக்கிறது. தண்ணீர் வரத்தும் குறைவாக இருக்கிறது. 2017, 2018, 2019 வருடங்களிலும் தண்ணீர் தாமதமாக திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் தண்ணீர் கூடுதலாக இருந்தால் மட்டும் அதை திறக்க முடியும்.

    Advertisement

    மின்சாரம் பயன்பாடு

    வெப்பம் காரணமாக மக்களுக்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படுகிறது. மழை குறைவாக இருக்கும் காரணத்தால் வெப்பம் அதிகமாக இருப்பதால் கூடுதலாக மின்சாரத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர். ஒரு குடும்பத்தில் ஒரு ஏசி இருந்தது. தற்போது இரண்டு மூன்று என ஏசி பயன்படுத்துகிறார்கள். கூடுதலாக மின்சாரம் தேவைப்படும் நிலையில் திமுக ஆட்சியில் அதற்கான முயற்சிகள் எதுவும் செய்யப்படவில்லை.

    சென்னைக்கு மட்டுமே ரூ.7,000 கோடி ரூபாய் செலவு செய்து மக்களுக்கு கூடுதல் மின்சாரம் பயன்படுத்துவதற்கு தேவையான உபகரணங்கள், அதற்கான கட்டுமான பணிகள் செய்திருக்க வேண்டும். அதை செய்யாமல் மொத்தமாக கடந்த ஐந்தாண்டு காலத்தில் ரூ.627 கோடி மட்டுமே செலவு செய்திருக்கிறார்கள். சென்னையை பொறுத்தவரை 3,500 மெகாவாட்டிற்கு மட்டுமே கொள்திறன் இருக்கிறது. ஆனால் 5,000 மெகாவாட் மின்சாரம் மக்கள் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றனர்.

    Advertisement

    உதயநிதி மீது காட்டம்

    புதிதாக மக்களுக்கு தேவையான பணிகளை கடந்த ஆட்சியில் செய்யவில்லை. நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களும் கொடுக்கப்பட வேண்டும் என்பதை முதலமைச்சர் வலியுறுத்தி இருக்கிறார். மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் முதலமைச்சர் தெளிவாக இருக்கிறார். தமிழகத்தின் குரலை சரியான முறையில் எங்கு கொண்டு செல்ல வேண்டுமோ அதை செய்திருக்கிறார். முதலமைச்சர் எதையும் வலியுறுத்தவில்லை என்று உதயநிதி சொல்கிறார்.

    உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்திற்கே 11 மணிக்கு தான் வருவார். அங்குள்ள வருகை பதிவேட்டை பார்த்தாலே தெரியும். அவருடைய துறைக்கே அப்போதைய முதல்வர் ஸ்டாலின் தான் முன்மொழிந்தார். இதை எல்லாம் உதயநிதி சொல்ல கூடாது. பொதுவாக எந்த குற்றம் என்றாலும் விசாரித்து நடவடிக்கை எடுக்க முடியும். சிங்கப்பெண் படை இப்போது உருவாக்கியிருக்கிறார். அந்தப் படை விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போதை பொருள் நடமாட்டம் இந்தியா முழுவதும் பெரிய அளவில் வளர்ந்துள்ளது.

    Advertisement

    சினிமா ஆட்சியா

    அதை தடுக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் நோக்கம். போதை பொருளை தடை செய்ய வேண்டும் என்பதுதான் முதல்வரின் கனவு. அதை படிப்படியாக நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். இடைத்தேர்தல் குறித்து முடிவு செய்ய காலம் இருக்கிறது. அதற்குள் என்னால் பதில் சொல்ல முடியாது. அப்போது யாருக்கு அந்த இடத்தை வழங்குகிறார் என்பது முதல்வர் விஜய் முடிவு மேற்கொள்வார். எங்களை பொறுத்த வரையில் தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம்.

    எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும் என்பது எங்கள் நோக்கம். மக்களுக்கு பணியாற்ற எல்லோரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரை. தேர்தல் அறிவித்த பிறகு என்ன முடிவு எடுக்கிறோம் என்பதை உங்களிடம் சொல்கிறோம். தமிழகத்தில் சினிமா பிம்பம் என்று பாஜக விமர்சிக்கிறது. ஆந்திராவில் துணை முதலமைச்சர் யார். பாஜக தான் அவரை துணை முதல்வர் ஆக்கியுள்ளது. அங்கும் சினிமா துறை தான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது" என்றார்.

    English Summary

    Minister Sengottaiyan said, Udhayanidhi criticize CM Vijay. Udhayanidhi came for assembly for morning 11 am itself. He cannot comment about Vijay.