SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்

  • கோவை: தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணி திரண்டனர். தவெகவுக்கு ஆதரவளித்தனர். இதனால் அவர்களின் பதவியை எடப்பாடி பறித்தார். வேலுமணி எடப்பாடியிடம் சரண்டரானாலும், பழைய பதவியை அவருக்கு கொடுக்கவில்லை. அதிமுகவில் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதால் அதிருப்தியான வேலுமணி குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கிருந்து எடப்பாடிக்கு அவர் முக்கிய மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

    Advertisement

    சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர்உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணி திரண்டனர். தவெகவுக்கு ஆதரவளித்தனர். இதனால்அவர்களின் பதவியை எடப்பாடி பறித்தார். வேலுமணி எடப்பாடியிடம் சரண்டரானாலும், பழைய பதவியை அவருக்கு கொடுக்கவில்லை.

    Advertisement

    எடப்பாடியை பகைத்த வேலுமணி

    அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த இடத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி இருந்தார். அதிமுக ஆட்சியில் நிழல் முதல்வர் என்றும் வேலுமணியை அழைத்தனர். கட்சியிலும், ஆட்சியிலும் அவர் பவர்புல்லாக இருந்தார். ஆட்சியை இழந்தும் கட்சியில் வேலுமணி செல்வாக்குடன் இருந்தார். கொங்கு மண்டலம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் தனக்கான ஆதரவு வட்டத்தை உருவாக்கினார். அவ்வபோது கருத்து வேறுபாடுகள் நிலவினாலும் எடப்பாடி - வேலுமணி நெருக்கமாகவே இருந்தனர்.

    ஆனால் கடந்த சில வருடங்களாக அவர்களிடையே விரிசல் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. சட்டமன்ற தேர்தல் தோல்வி எடப்பாடி வேலுமணியை பகையாளியாக மாற்றிவிட்டது. எடப்பாடிக்கு எதிராக பனிப்போர் நடத்தி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சரவையில் இடம்பெற முயற்சி செய்தார் வேலுமணி. அது நடக்கவில்லை. இதனால் வேலுமணி மீண்டும் எடப்பாடியிடம் சரண்டரானார். மோதல் நிலவிய போது நமது அம்மா நாளிதழ், நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஆகியவற்றை வேலுமணி கைப்பற்றினார்.

    Advertisement

    அடுத்தடுத்து நெருக்கடி

    அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வேலுமணியிடம் இருந்த தலைமை நிலைய செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பதவி ஆகியவற்றை எடப்பாடி பழனிசாமி பறித்தார். எடப்பாடியிடம் சரண்டராகிவிட்டதால் தன்னுடைய பழைய பதவி கிடைக்கும் என்று வேலுமணி நினைத்தார். பதவி கிடையாது என்று எடப்பாடி கறாராக உள்ளார். கோவை அதிமுக அலுவலகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேலுமணி என்னவெல்லாமோ செய்து பார்த்தார்.

    அதையும் அவரால் தக்க வைக்க முடியவில்லை. அவர் வசம் இருந்த மாவட்ட செயலாளர் பதவியில், முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுசாமி நியமிக்கப்பட்டு அவர் சார்ஜ் எடுத்துவிட்டார். இந்த நிகழ்ச்சியில் வேலுமணியின் ஆதரவாளர்கள் அனைவரும் வேலுசாமியை சந்தித்து அவரின் ஆதரவாளர்களாக மாறிவிட்டனர். மாவட்ட செயலாளர் பதவியேற்பு நிகழ்வுக்கு வேலுசாமியே நேரடியாக வேலுமணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அன்றைய தினம் கோவையில் இருந்து கொண்ட வேலுமணி புறக்கணித்துவிட்டார்.

    Advertisement

    சிங்கப்பூரில் ஐக்கியம்

    பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டிற்கு சென்றபோது வேலுமணியை துரோகி என்று அழைத்து அவமானப்படுத்தினர். இதனால் அதிருப்தியான வேலுமணி திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அடுத்தடுத்த பிரச்சனைகளால் நொந்து போன வேலுமணி சிங்கப்பூர் சென்றுவிட்டாராம். தன் குடும்பத்தினருடன் சிங்கப்பூரில் ஓய்வு எடுக்க சென்றுள்ளாராம். அவருடன் நெருங்கிய உறவினர்கள் சிலரும் சென்றுள்ளனர். வேலுமணி அங்கு சில பிசினஸ்களை செய்து வருகிறாராம்.

    சில வாரம் அங்கு தங்கியிருக்க முடிவு செய்துள்ளாராம். இதனால் வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரில் வேலுமணி கலந்து கொள்ள வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது. நான் மற்றவர்களை போல கட்சி மாறி முதுகில் குத்தவில்லை. அவரிடம் சரண்டரான பிறகு பதவி கொடுக்காமல் ஒதுக்குவது சரியில்லை. 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமித்து எனக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்க வேண்டும். அப்போது தான் நான் கட்சியில் தொடர முடியும் என்று எடப்பாடி தரப்புக்கு மெசேஜ் அனுப்பியுள்ளாராம்.

    English Summary

    SP Velumani: ADMK Velumani travelled to Singapore. Sent Final message to Edappadi Palanisamy over he's decision over Party.