SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!


  • சென்னை: சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணி திரண்டனர். தவெகவுக்கு ஆதரவளித்தனர். இதனால் அவர்களின் பதவியை எடப்பாடி பறித்தார். வேலுமணி எடப்பாடியிடம் சரண்டரானாலும், பழைய பதவியை அவருக்கு கொடுக்கவில்லை. வேலுமணி பழையபடி பவர்புல்லான பதவியை பெறுவதற்கு கே.பி.முனுசாமி தடையாக இருப்பதால் பிரச்சனை எழுந்துள்ளது.

    Advertisement

    இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், "எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு அதிமுகவில் ஜாதி அடிப்படையில் தான் முக்கிய பதவிகள் ஒதுக்கப்பட்டன. கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த எடப்பாடி பொதுச் செயலாளர், அதே சமுதாயத்தின் வேலுமணி தலைமை நிலைய செயலாளர் பதவி ஒதுக்கப்பட்டது. வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த கே.பி. முனுசாமி, முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த நத்தம் விஸ்வநாதன் துணை பொதுச்செயலாளர் பதவிகளில் இருந்தனர்.

    Advertisement

    ஜாதிய முறையில் பதவி

    தற்போது வேலுமணியிடம் இருந்த தலைமை நிலைய செயலாளர், நத்தம் விஸ்வநாதனிடம் இருந்த துணை பொதுச்செயலாளர் பதவிகளுக்கு அதிமுகவில் போட்டி நிலவுகிறது. நத்தம் விஸ்வநாதன் வசம் இருந்த துணைப் பொதுச்செயலாளர் பதவியை பெற மதுரையின் முன்னாள் அமைச்சர்கள் காய் நகர்த்தி வருகிறார்கள். வேலுமணியிடம் இருந்த தலைமை நிலைய செயலாளர் பதவியை பெற கொங்கு மண்டல கவுண்டர் நிர்வாகிகள் பெற முயற்சித்து வருகிறார்கள்.

    வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் மாவட்ட செயலாளர்களாகவும் இருந்தனர். அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பதவிகளிலும் வேறு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வேலுமணி கடந்த வாரம் கோவை திரும்பினார். அப்போது அவரை வரவேற்ற ஆதரவாளர்கள் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் என்கிற பதவியை குறிப்பிட்டனர். ஆனால் பதவி பறிக்கப்பட்ட நிர்வாகிகள் பழைய பதவிகளை பயன்படுத்த கூடாது என்று எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    முனுசாமியால் அப்செட்டான வேலுமணி

    இந்நிலையில் மாநில பதவிகளில் முனுசாமி பல ஆலோசனைகளை எடப்பாடியிடம் வழங்கியுள்ளார். கவுண்டர் சமுதாயத்தில் நீங்கள் (எடப்பாடி), முக்குலத்தோர் சமுதாயத்தில் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், வன்னியர் சமுதாயத்தில் நான் இருக்கிற்றேன். ஏற்கனவே இந்தமுறையில் பதவி போட்டு தேர்தல்களை சந்தித்துவிட்டோம். ஆனால் தேர்தலில் நாம் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    எனவே நீக்கப்பட்ட பதவிகளில் அதே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொடுக்க வேண்டியதில்லை. அந்த இடங்களில் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கும்போது அவர்கள் உற்சாகத்துடன் பணியாற்றுவார்கள். இது கட்சிக்கும் பலனளிக்கும் என முனுசாமி கூறியுள்ளார். இதை எடப்பாடி தீவிரமாக யோசிக்க தொடங்கியுள்ளாராம். இதனால் வேலுமணி கடுப்பிலும், அதிருப்தியிலும் இருக்கிறார்" என்றார்.

    English Summary

    SP Velumani: ADMK problem going worse. SP Velumani trying to get old posting. However, Munusamy trying to stop create controversy.