எடப்பாடி தப்பு.. பொள்ளாச்சி ஜெயராமன் ரொம்ப தப்பு.. கோவை அதிமுக கூட்டத்தில் பொங்கிய வேலுமணி

  • கோவை: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. திமுக ஆதரவில் ஆட்சியமைக்க எடப்பாடி முயற்சித்ததாக கூறி, வேலுமணி, சி.வி சண்முகம் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் தவெகவுக்கு ஆதரவளித்தனர். இதனால் அவர்களுக்குள் பனிப்போர் நிலவி வருகிறது. பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டுக்கு சென்றபோது வேலுமணியை துரோகி என்றழைத்தனர். இந்நிலையில் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி மற்றும் ஜெயராமனை வேலுமணி கடுமையாக விமர்சித்தார்.

    Advertisement

    அதிமுக கோவை மத்திய மாவட்ட ஆலோசனை கூட்டம் தொண்டாமுத்தூரில் நடைபெற்றது. இதில் தொண்டாமுத்தூர் எம்எல்ஏ வேலுமணி, மத்திய மாவட்ட செயலாளர் செ.ம வேலுசாமி, முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். பதவி பறிக்கப்பட்ட பிறகு கோவை அதிமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வேலுமணி தவிர்த்து வந்தார். செ.ம. வேலுசாமி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு முதல்முறை அவருடன் ஒன்றாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    Advertisement

    ஜெயராமன் தவறாக

    கூட்டத்தில் பேசிய எஸ்.பி வேலுமணி, "செ.ம வேலுசாமி மீது எங்களுக்கு வருத்தம் இல்லை. மற்ற மாவட்டங்களுக்கு முன் உதாரணமாக பணி புரிந்தவர்கள் நாங்கள். அம்மா ஜெயலலிதா இருக்கும் போது கூட சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். அதை எல்லாம் சொல்லி சொல்லி தான் சரி செய்தோம். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது உற்ற துணையாக இருந்தோம். கட்சி முக்கியம். அதிமுக எதிர்கட்சியாக இருந்த பிறகு மீண்டும் ஆளுங்கட்சியாக வந்துள்ளது.

    திமுக மீது எங்களுக்கு எதிர்ப்புள்ளது. அது எப்போதும் மாறாது. நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு வாக்களித்தற்காக எங்களை துரோக்கி என்கிறார்கள். பொள்ளாச்சி ஜெயராம் தவறாக செயல்படுகிறார். பொள்ளாச்சி ஜெயராம், அவர் மகன்களை சமூக வலைதளங்களில் விமர்சிக்க வேண்டாம். சி.வி. சண்முகம், தங்கமணி, விஸ்வநாதன் ஆகியோர் உடன் நின்றவர்கள். எனக்கு எல்லா பதவியும் அம்மா கொடுத்தார்கள்.

    Advertisement

    சிந்திக்க வேண்டும்

    நாம் ஏன் ஆளுங்கட்சியாக வர முடியவில்லை என்பதை ஆராய வேண்டும். மனசாட்சி இல்லாமல் பேசுவதை நிறுத்த வேண்டும். யார் என்பது எனக்கு தெரியும். இளைஞர்கள் நம்முடன் தான் உள்ளார்கள். எனக்கு பதவி முக்கியமில்லை. அனைவரும் எல்லா இடத்திற்கு வர வேண்டும். உங்களுடைய சகோதரன் நான். என்றைக்கும் உங்கள் கூட நிற்பேன்" என்று கூறினார். முன்னதாக வேலுமணி எடப்பாடி பழனிசாமி பெயரை சொன்னவுடன் தொண்டர்கள் ஆவேசப்பட்டனர். அவர்களை வேலுமணி அமைதிப்படுத்தினார்.

    English Summary

    ADMK Former Minister SP Velumani said, Our problem with Edappadi Palanisamy only. Pollachi Jayaraman doing big mistake.