மாஜி அமைச்சர் அன்பில் மகேஷ் கைது விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியான தகவல்கள்.. வானதி சீனிவாசன் ஷாக்

  • கோவை: முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் மூலம் கடந்த கால திமுக அரசு பள்ளிக் கல்வித் துறையை பணம் கொழிக்கும் துறையாகவே மாற்றியிருந்திருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்குவதற்காகவே தனியார் பள்ளி ஒழுங்குமுறை விதிகளில் அரசாணையைத் திருத்தி வெளியிட்டதாகக் கூறப்படும் செய்தியும், சுமார் 40 லட்சம் முதல் 1 கோடி வரை டார்கெட் வைத்து ரூ.400 கோடி வரை முறைகேட்டில் செயல்பட்டதாகவும் மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினர் விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் செய்திகள் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது.

    Advertisement

    மாநில பட்ஜெட்டில் அதிகமாக நிதி ஒதுக்கப்படும் துறையான பள்ளிக் கல்வித் துறையில் மக்களின் வரிப்பணத்தினையும் தாண்டி, தனியார் பள்ளிகளிடம் வசூல் வேட்டை நடந்திருப்பதாகக் கூறப்படுவது கடந்த கால திமுக அரசின் ஊழல் லிஸ்ட்டில் யார் Top-க்கு வருவது என்று போட்டிபோட்டுக் கொண்டு செயல்பட்டது போல் தெரிகிறது. இந்த விவகாரத்தில் இன்னும் எத்தனைபேர் பின்னால் உள்ளனர் என்பதை போலீசார் தீவிர விசாரணை நடத்தி அவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    அப்புறம், தற்போதைய தவெக அரசின் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களே..! நீங்கள் சொன்ன அந்த 5 கோடி புகார் என்னவாயிற்று?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    Advertisement
    Anbil: ரூ 100 கோடி லஞ்சம் கொடுத்ததாக சொன்ன தனியார் பள்ளிகளை ஏன் விசாரிக்கலை? அன்பில் மகேஷ் கேள்வி

    5 கோடி புகார் என்ன

    அமைச்சர் ராஜ் மோகன் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில் பேசும்போது, "இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியை தனக்குக் கொடுத்தால் ரூ.5 கோடி தருவதாக ஒருவரைக் கூறி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் லயோலா மணி தன்னிடம் தெரிவித்ததாக கூறினார். மேலும், அந்தப் பதவி புஷ்பவனம் குப்புசாமிக்கு எந்தவித லஞ்சமும் பெறாமல் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

    Advertisement

    இந்த விவகாரத்தை கெட்டியாக பிடித்துக்கொண்ட எதிர்க்கட்சிகள் 5 கோடி லஞ்சம் தருவதாக கூறியது யார் என்று விளக்கம் அளிக்க வேண்டும். அப்படி லஞ்சம் கொடுக்க முயன்வர் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன.

    அன்பில் மகேஷ் விவகாரம் என்ன

    தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுதருவாக பல கோடி மோசடி செய்யததாக எழுந்த குற்றச்சாட்டில் முன்னாள் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கைதாகி சிறையில் உள்ளார். அவரது ஜாமீனுக்கு எதிராக காவல் துறை தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் மற்றும் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் உஷாராணி ஆகியோர் வாதங்கள் வைத்தனர்.

    Advertisement

    அதில் "அரசகுமார், முத்துக்குமார் இருவரும் சேர்ந்து ஒரு சங்கம் நடத்தினார்கள். அந்த சங்கத்தின் மூலம் அங்கீகாரம் கோரும் பள்ளிகளை தேர்ந்தெடுத்து அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் பணம் வசூலித்துள்ளனர். ஆரம்பத்தில் முன்னாள் அமைச்சர் தொடர்பு குறித்து புகார்தாரருக்கு தெரியாது. இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது கிடையாது. காவல் துறை மூன்று நாட்கள் காவலில் வைத்து விசாரித்ததில் புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அது குறித்தும் விசாரிக்க வேண்டியுள்ளது. இது வெறும் மோசடி வழக்கல்ல, சிக்கலான வழக்கு.

    'விஞ்ஞான ரீதியிலான ஊழல்’.. அரசு வக்கீல் சொன்னதுமே எதிர்ப்பை காட்டிய அன்பில் மகேஷ் தரப்பு வழக்கறிஞர்!
    Advertisement

    முத்துக்குமாரை விசாரித்து ஆதாரங்கள் சேகரிக்க வேண்டும். அதுகுறித்து அன்பில் மகேஸிடம் விசாரிக்க வேண்டியிருக்கிறது. பள்ளிகள், மாணவர்கள் நலனுக்காக 20 ஆண்டுக்கு ஒருமுறை அங்கீகாரம் அரசாணை கொண்டு வரப்படவில்லை. மூன்று ஆண்டுக்கு ஒருமுறை அங்கீகாரத்தால் தனியார் பள்ளிகளுக்கு அதிக செலவு ஏற்படும். அதனால் அவர்கள் பணம் கொடுத்துள்ளனர். 400 கோடி ரூபாய் வரை பணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது" என்று வாதம் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Senior BJP leader Vanathi Srinivasan has criticized that the previous DMK government has turned the school education department into a money-grubbing department through the successive reports on the arrest of former school education minister Anbil Mahesh.