வேகமாக செயல்படாத விஜய்.. சிரித்த ஐ.ஜி, உளறிய அமைச்சர்.. சூலூர் கேசில் சொதப்பிய தவெக!

  • கோவை: கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம், தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக (TVK) அரசுக்கு மிகப்பெரிய அரசியல் நெருக்கடியையும் மக்கள் நன்மதிப்பு இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நிர்வாகத் திறமையின்மை, அலட்சியப் போக்கு மற்றும் ஊடகங்களை எதிர்கொள்ள அஞ்சும் மனநிலை ஆகியவை இந்த ஒரு சம்பவத்தின் மூலம் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளதாக பொதுமக்கள் மத்தியில் பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    Advertisement

    வழக்கை கையாண்ட விதம் ஒருபுறமிருக்க, முதல்வர், அமைச்சர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்பாடுகள் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றிய கதையாக மாறியுள்ளது.

    Advertisement

    இதுவரை பேசாத முதல்வர் விஜய்!

    திமுக ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் கூறி, மேடைக்கு மேடை ஆக்ரோஷமாகப் பேசி ஆட்சிக்கு வந்தவர் முதல்வர் விஜய். ஆனால், தற்போது அவரது ஆட்சியில் ஒரு பச்சிளம் சிறுமிக்கு இழைக்கப்பட்ட இந்த கொடூரத்திற்குப் பிறகு, அவர் நடந்து கொள்ளும் விதம் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    சூலூர் சிறுமி கொலை வழக்கு மற்றும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து இதுவரை விஜய் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. அறிக்கையோடு நிறுத்திக்கொண்டார். பிரச்சனைகளை எதிர்கொள்ளத் தைரியமில்லாமல் முதல்வர் ஓடுகிறார் திமுகவினர் அவர் மீது விமர்சனங்களை வைக்கின்றனர்.

    Advertisement

    ஐ.ஜி பிரஸ் மீட்டில் 'சிரிப்பு': கொதித்தெழுந்த பொதுமக்கள்!

    இந்த விவகாரத்தில் காவல் துறையின் செயல்பாடுகளும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. கோவைக்கு நேரில் வந்த மேற்கு மண்டல ஐ.ஜி ஆர். வி. ரம்யா பாரதி, இந்த கொடூர வழக்கின் விசாரணைக் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். ஒரு 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த பிரஸ் மீட்டின் போது ஐ.ஜி ரம்யா பாரதி முகத்தில் புன்னகையோடு (சிரித்தபடி) பேசியது பொதுமக்களையும் சமூக ஆர்வலர்களையும் பெரும் கொதிப்படையச் செய்துள்ளது.

    "ஒரு குழந்தையின் மரணத்தைப் பற்றிப் பேசும் போது ஒரு ஐ.ஜி அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிக்கு எப்படிச் சிரிக்க முடிகிறது? இந்த அரசின் அதிகாரிகளுக்குப் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வலி கொஞ்சமாவது புரிகிறதா?" என்று பொதுமக்கள் சமூக வலைதளங்களில் ஐ.ஜியின் வீடியோவைப் பகிர்ந்து தங்களின் கடுமையான கண்டனங்களை அள்ளி வீசி வருகின்றனர்.

    Advertisement

    "இது நிர்வாகப் பிரச்சினை இல்லை, அரசியல் பிரச்சனை" - அமைச்சர் கீர்த்தனின் விபரீத உரை!

    டிவிகே அரசின் மீதான மக்களின் கோபத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றது அமைச்சர் கீர்த்தன் அளித்த பேட்டிதான். இந்த கொடூர சம்பவம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கீர்த்தன், "இது ஒன்னும் நிர்வாகப் ரீதியான தோல்வி இல்லை. எதிர்க்கட்சிகள் சும்மா அரசியல் செய்வதற்காக இதைப் பெரிதாக்குகிறார்கள். இது வெறும் அரசியல் பிரச்சனை தான்" என்று மிகவும் பொறுப்பற்ற முறையில் பதிலளித்தார்.

    ஒரு குழந்தையின் கொடூர மரணத்தையும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவையும் வெறும் "அரசியல் பிரச்சனை" என்று சாதாரணமாகக் கடந்து செல்ல முயன்ற அமைச்சரின் இந்த பேச்சு ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தின் கண்ணீரை விட, தங்களின் அரசியல் பிம்பத்தைக் காப்பாற்றுவதே இந்த அரசுக்கு முக்கியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Advertisement

    ஒட்டுமொத்தமாக சொதப்பிய தவெக (TVK)!

    தேர்தலுக்கு முன்பு 'மாற்றம்', 'அதிரடி நடவடிக்கை' எனப் பேசிவிட்டு, சட்டம் ஒழுங்கு என்று வரும்போது நிர்வாக ரீதியாக தவெக அரசு ஒட்டுமொத்தமாகச் சொதப்பி நிற்கிறது.

    உயர் அதிகாரி பிரஸ் மீட்டில் சிரிப்பது,

    அமைச்சர் இதை அரசியல் என்று கொச்சைப்படுத்துவது

    என அரசின் ஒவ்வொரு நகர்வும் அவர்களின் முதிர்ச்சியற்ற அரசியல் மற்றும் நிர்வாகத் தொய்வையே காட்டுகிறது. "இவர்களையா நம்பி மாற்றத்திற்காக வாக்களித்தோம்?" என்று வாக்களித்த மக்களே குமுறும் நிலைக்கு விஜய் அரசு தள்ளப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியது மட்டுமின்றி, பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்திய இந்த விவகாரம் விஜய் அரசுக்கு விழுந்த மிகப்பெரிய சம்மட்டி அடியாகும்.

    English Summary

    Sulur Case Backfire: CM Vijay Dodges Media Questions, Minister Terming Tragedy 'Political' Sparks Outrage