பாட்டிலுக்கு 10 ரூபா..அடியோடு மாறுது TASMAC! இனி எல்லமே MRPக்குள்ளேதான்! ஆக்‌ஷனில் அமைச்சர் விக்னேஷ்

  • கோவை: மதுபாட்டிலுக்கு தனியாக ரூ.10 ஸ்டிக்கர் ஒட்டும் முறை ரத்து செய்யப்படும். சுற்றுச்சூழல் வரி இனி எம்.ஆர்.பி விலைக்குள்ளேயே இடம்பெறும் எனவும், ரூ.10 கூடுதல் வசூல் செய்தால் முதலில் நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் செய்தால் பணி நீக்கம் வரை நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், டாஸ்மாக் பாட்டில்களுக்கு புதிய சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் அமைச்சர் விக்னேஷ்.

    Advertisement

    கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன. அதன் ஒரு பகுதியாக, மதுபாட்டில்களுக்கு தனியாக ரூ.10 ஸ்டிக்கர் ஒட்டும் முறை முற்றிலும் ரத்து செய்யப்படும்.

    Advertisement

    சுற்றுச்சூழல் வரி இனிமேல் தனியாக வசூலிக்கப்படாமல், மதுபாட்டிலின் மொத்த விற்பனை விலைக்குள்ளேயே சேர்க்கப்படும். அரசின் ஒரு ரூபாய் வருவாய் கூட தனியார் கைகளுக்குச் சென்றுவிடக் கூடாது என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.

    அமைச்சர் விக்னேஷ்

    டாஸ்மாக் பாட்டில்களின் விலை நிர்ணயம் தொடர்பாகப் புதிய சட்டத்தையே விரைவில் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவையும் மீறி, மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூல் செய்தால் உடனடியாக முதல் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதே தவறை மீண்டும் செய்தால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது வரை கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    Advertisement

    டாஸ்மாக்

    கடந்த 20 ஆண்டுகாலமாக டாஸ்மாக் ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருக்கும் வேதனையைத் தீர்க்கத் தமிழக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. டாஸ்மாக் ஊழியர்களின் சம்பளக் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிச்சயம் நிறைவேற்றப்படும். தமிழகம் முழு​வதும் பரவலாக மது​பாட்​டிலுக்கு கூடு​தலாக ரூ.10 வாங்​கு​வ​தாக குற்​றச்​சாட்டு உள்​ளது.

    ஊதிய உயர்வு

    கூடு​தல் விலைக்கு விற்​பனை செய்​யும் விற்​பனை​யாளர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது. டாஸ்​மாக் பணி​யாளர்​களுக்​கான ஊதிய உயர்வு பரிசீலனை​யில் இருக்​கிறது. டாஸ்​மாக்கை தனி​யார்​மய​மாக்​கும் எண்​ணம் அரசுக்கு இல்​லை. டாஸ்​மாக்​கில் நடந்த ஊழல்​கள் வெள்​ளை​யாக வெளியே தெரி​கிறது. பிறகு வெள்ளை அறிக்கை எதற்​கு? ஊழல் தொடர்​பாக நடவடிக்கை எடுப்​ப​தற்​காகத்​தான் குற்​றச்​சாட்டு சொல்லி வரு​கிறோம்.

    Advertisement

    டாஸ்​மாக் கடை

    717 கடைகள் மட்​டுமின்​றி, தமிழகம் முழு​வதும் பொது​மக்​களுக்கு இடையூறாக இருக்​கும் டாஸ்​மாக் கடைகளை மூட​வும், இடம் மாற்​றம் செய்​ய​வும் நடவடிக்கை எடுக்​கப்​படும். அதற்​கான, பட்​டியல் தயார் செய்​யும் பணி நடை​பெற்று வரு​கிறது" என்றார்.

    English Summary

    Tamil Nadu plans MRP-only TASMAC pricing by removing the ₹10 sticker charge and tightening action against overpricing.