200 படிகளில் 70 ஏறிவிட்டேன்.. பொறி வைத்த விக்னேஷ்.. டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி

  • கோவை: தவெக ஆட்சியில் டாஸ்மாக் ஊழியர்களை பழிவாங்கும் நோக்கம் அரசுக்கு கிடையாது. டாஸ்மாக்கில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் யார் தவறு செய்தாலும் தவறுதான் அதற்கான தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும். டாஸ்மாக் பிரச்சனையில் 200 படிகள் உள்ளன. அதில் நான் 70 படிகள் ஏறிவிட்டேன் என்று அமைச்சர் விக்னேஷ் சூசகமாக கூறியுள்ளார்.

    Advertisement

    கோவை தொண்டாமுத்தூர் அருகே தவெக சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "புனிதமான தமிழ் மண்ணில் பிறக்கும் குழந்தைகள் தளபதி ஆட்சியில் வரம் வாங்கிக்கொண்டு பிறக்கும் குழந்தைகளாவர். அவர்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    Advertisement

    யார் தவறு செய்தாலும்

    டாஸ்மாக் ஊழியர்கள் முன் அறிவிப்பின்றி கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது அவர்கள் மீண்டும் கடைகளை திறக்க ஆரம்பித்துவிட்டனர். பணிக்கு வராத ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதில் யாரையும் பழிவாங்கும் நோக்கம் அரசுக்கு கிடையாது. தவறு யார் செய்தாலும் தவறுதான். அரசு தவறு செய்தாலும், அமைச்சர் தவறு செய்தாலும் அதற்கான தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும்.

    டாஸ்மாக் பிரச்சனைக்கு திமுக, அதிமுகதான். காரணம் இன்றைக்கு டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற நிலை ஏற்பட்டதற்கு திமுகவும் அதிமுகவும்தான் காரணம். கடந்த காலங்களில் இந்த பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இது இவ்வளவு தூரம் வந்திருக்காது. இது ஒரு உதாரணம்தான். இதுபோன்று பல்வேறு துறைகளிலும் பிரச்சனைகள் உள்ளன. அவற்றையும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    70 படிகள்

    டாஸ்மாக் துறை பிரச்சனைகள் 200 படிகள் உள்ளன. அதில் நான் 70 படிகள் ஏறிவிட்டேன். அதில் நான் தற்போது 70 படிகள் வரை ஏறிவிட்டேன். மீதமுள்ள படிகளையும் ஏறி, டாஸ்மாக் தொடர்பான பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்" என்றார். அவரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்னேஷின் பேட்டி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    English Summary

    Minister Vignesh, Tasmac issue had 200 steps. I completed 70 steps. soon will finish other steps.