கோயம்புத்தூர்: கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், சிறுமியின் உடல் சொந்த ஊரில் தற்போது தகனம் செய்யப்பட்டிருக்கிறது.
கோயம்புத்தூரில் கடந்த 21ம் தேதி வீட்டிற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி காணாமல் போனதாக பெற்றோர் பள்ளப்பாளையும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
புகாரின் அடிப்படையில் சுமார் 25 தனிப்படைகளை அமைத்து 250க்கும் அதிகமாக சிசிடிவி கேமராக்களை செக் செய்து சந்தேகத்தின் அடிப்படையில் பக்கத்து வீட்டை சேர்ந்த கார்த்திக் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கார்த்திக் மற்றும் மோகன் ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். போலீசார் இவர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இந்நிலையில், சிறுமியின் உடல் சொந்த ஊரான சேலம் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டிருக்கிறது.