கோயம்புத்தூர்: கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில், போலி புத்தகங்கள் இருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியிருக்கிறார். இந்த நூலகத்தில் 'திரிஷா விஜய்' என்கிற பெயரில் புத்தகம் இருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கின்றன.
அரிசி, பருப்பு, எண்ணெயில் கலப்படம் இருந்தால் அதை ஊழல் என்று சொல்லலாம்.. ஆனால் புத்தகங்களில் போலி இருந்தால்? இது ஊழல் இல்லை அதுக்கும் மேலே! மன்னிக்க முடியாத குற்றம்.
பெரியார் நூலகத்தில் இப்படியான புத்தகங்கள் சுமார் 2,000 கொட்டிக்கிடக்கின்றன. அந்த புத்தகங்களில் பல தவறான தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. உதாரணத்திற்கு, ஒரு புத்தகத்தில் 'நாலடியார் தமிழின் முக்கியமான கவி' என்று எழுதப்பட்டிருக்கிறது. இதை பார்த்து ஷாக்கானதாக கூறியிருக்கும் எழுத்தாளர் பெருமாள் முருகன், அதைவிட பெரிய அதிர்ச்சியை கொடுத்த புத்தகத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். பாரதியாரின் பெயரில் AI கதைகள் இடம்பெற்றிருப்பதை வேதனையுடன் தெரிவித்திருக்கிறார். இது கூட பரவாயில்லை.. கீழடியில் நந்தி சிலை கிடைத்தது என்று உருட்டுக்கள் அடங்கிய புத்தகங்கள் எல்லாம் இருக்கின்றதே! என பெருமாள் முருகன் அதிர்ச்சியடைந்திருக்கிறார். 'சிந்தை' தளத்தில் இது குறித்து அவர் எழுதியிருக்கும் கட்டுரையில்.. நூலகங்களுக்காக 'அகல் விளக்கு' பதிப்பகம் என்கிற போலி பதிப்பகத்திலிருந்து புத்தகங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிட்டிருக்கிறார். அதைவிட முக்கியமான விஷயம், இந்த புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்கள்தான். இதற்கு முன்னர் தமிழ் இலக்கிய சூழலில் கேள்விப்படாத பெயர்களாக அவை இருக்கின்றன. குறிப்பாக 'திரிஷா விஜய்' என்கிற பெயரை இதற்கு முன்னர் யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். திரிஷா விஜய் என்கிற பெயரில் புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இந்த பெயர்களும் போலியானவை.. புத்தகங்களும் போலியானவை. இது குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என்பது கேள்வியாக இருக்கிறது.ECI கட்டுப்பாட்டுக்கு போன பிறகு.. அகல் விளக்கு ஏற்றப்பட்டதா? பெரியார் நூலக விஷயத்தில் ஷாக் தகவல்கள்
விஜய பாலு
விஜய ஆதித்யன்
ஜோதி சரவணன்
ஜோதி ஹரிஹரன்
ஜோதிலட்சுமி
அன்பழகன்
நிவேதா அன்பழகன்
தாமரை பன்னீர்
ராணி பன்னீர்
தாமரை கார்த்தி
தாமரை சிவா
தாமரை முரளி
சூர்யா பாலு
மங்களேஸ்வரி பாலு
மோனிகா சூர்யா
மோனிகா ரவி
பிருந்தா சேதுராமன்
தர்ஷினி சேதுராமன்
மனிஷா சரவணன்
மனிஷா தினேஷ்
திவ்யா தினேஷ்