வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் ஜாலியாக வந்த சிறுத்தை.. கோவையில் பதறி ஓடிய டூரிஸ்ட்கள்!

  • கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வனவிலங்குகளின் நடமாட்டம் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. நகர்ப்புற பகுதிகள், எஸ்டேட் பகுதிகள் மட்டுமல்லாமல், பொள்ளாச்சி - வால்பாறை சாலையிலும் சிறுத்தைகளின் உலா தொடர்கதையாகிவிட்டது. அது தொடர்பான ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி காண்போரை பதற வைத்து வருகிறது.

    Advertisement

    கடந்த 4 நாட்களாகவே பகல் நேரங்களிலேயே எஸ்டேட் பகுதிகளுக்குள் சிறுத்தை, யானை, காட்டுமாடு என ஒவ்வொன்றாக வர ஆரம்பித்து விட்டதால், தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.

    Advertisement

    வால்பாறை - பொள்ளாச்சி சாலை

    இதனிடையே வால்பாறையிலிருந்து அட்டகட்டி செல்லும் சாலையில் யானைகளை தொடர்ந்து சிறுத்தைகளும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டது போலும்.. புதுத்தோட்டம், ரொட்டிக்கடை, அய்யர்பாடி பகுதிகளில் இதன் நடமாட்டம் மிகவும் அதிகமாகவே உள்ளது..

    மாலை நேரங்களில் வால்பாறை - பொள்ளாச்சி சாலைத் தடுப்புச்சுவர் மீது சிறுத்தை ஒன்று உட்கார்ந்திருப்பதை பார்த்து, அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் அதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட, அது பயங்கரமாக வைரலாகி விட்டது..

    சாலையோரம் ஜாலியாக வந்த சிறுத்தை

    இதையடுத்து "சாலையோரங்களில் சிறுத்தைகள் முகாமிடுவதால் சுற்றுலா பயணிகள் கவனமாக இருக்க வேண்டும், மாலை நேரத்தில் தனியாக நடப்பதைத் தவிர்க்க வேண்டும்" என வனத்துறை 4 நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

    Advertisement

    இந்த சூழலில்தான், அய்யர்பாடி பகுதியில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று, வாகனங்கள் செல்லக்கூடிய பிரதான சாலையிலேயே நேற்று நடந்து சென்றுள்ளது. அதை அந்த வழியாகச் சென்ற சுற்றுலா பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்ய, அந்த வீடியோவும் இப்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோழிகளை சாப்பிட்ட சிறுத்தைகள்

    ஏற்கனவே கடந்த மாதம் ரொட்டிக்கடை பகுதியில் செல்வக்குமார் என்பவரது வீட்டுக்குள் புகுந்து கோழியை பிடிக்க சிறுத்தை முயன்றபோதே, கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் இப்போது அதே பகுதியில் மீண்டும் சிறுத்தை சாலையில் உலா வருவது மக்களைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

    Advertisement

    இதனிடையே, வால்பாறையை அடுத்த அதிரப்பள்ளி அருகே உள்ள வெட்டிக்குழி பகுதியில், குடியிருப்புக்குள் புகுந்து ஆடு, கோழிகளை வேட்டையாடி வந்த 3 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை ஒன்று வனத்துறையின் கூண்டில் சிக்கியது. இரும்பு கம்பியில் மோதியதால் முகத்தில் லேசான காயத்துடன் மீட்கப்பட்ட அச்சிறுத்தை, மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு பரம்பிக்குளம் புலிகள் காப்பக அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.

    டூரிஸ்ட்கள் பீதி

    ஆனால், "எங்கள் பகுதியில் கோழிகளை வேட்டையாடியது இதைவிடப் பெரிய சிறுத்தை.. இன்னமும் ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இங்கு சுற்றித் திரிகின்றன" என வெட்டிக்குழி பகுதி மக்கள் மீண்டும் ஒரு பகீர் தகவலைத் தெரிவித்துள்ளனர்... தொடரும் இந்த சிறுத்தைகள் நடமாட்டத்தால் மக்கள் பெரும் பீதியில் இருக்கிறார்கள்..

    Advertisement

    எனவே வனத்துறையினர் உடனடியாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, அனைத்து வனவிலங்குகளின் நடமாட்டத்தையும் கண்காணித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது,. யானைகள் நடமாட்டத்தை போலவே சிறுத்தைகளின் நடமாட்டமும் ஆங்காங்கே தென்பட்டு வருவது, கலக்கத்தை தந்து கொண்டிருக்கிறது.. அதிலும் டூரிஸ்ட்கள் ரொம்பவே பயந்து போயிருக்கிறார்களாம்..!!!

    English Summary

    Valparai Leopard Spotted on Pollachi Road; Panicked Tourists Run for Safety in Coimbatore District