தவெகவின் இரட்டை வேடம்.. திமுக கொடுத்த பாதையில் பயணிக்க வேண்டும்.. வீரபாண்டியன் விமர்சனம்

  • சென்னை: தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் உறவை ஆராய அமைத்த உயர்மட்ட குழுவை அரசு கலைத்துள்ளது. இது அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவெகவுக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் மாநில உரிமைகளில் இரட்டை நிலை எடுக்க கூடாது என தவெக மீது வீரபாண்டியன் விமர்சனம் வைத்துள்ளார்.

    Advertisement

    சென்னை இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பெரியார் அறிவுலகம் கடந்த ஆட்சியில் நல்ல முயற்சி. உலகிலேயே சுய மரியாதைக்கான இயக்கத்தை தொடங்கியவர் தந்தை பெரியார். ஒவ்வொரு மனிதனும் யாருக்கும் உயர்வும் இல்லை தாழ்வும் இல்லை என சொன்னவர். அவர் பெயரில் நூலகம் அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதில் ஊழல் நடந்துள்ளது என சிறந்த எழுத்தாளர்களே சொல்லியுள்ளனர்.

    Advertisement

    தண்டனை வேண்டும்

    அரசு கவனம் செலுத்தி ஊழல் முறைகேடுகளில் யார் ஈடுபட்டிருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் உறவை ஆராய அமைத்த உயர்மட்ட குழுவை அரசு கலைத்துள்ளது. இது ஏற்புடையதல்ல. மத்திய, மாநிலங்களின் உறவு குறித்து நீண்ட காலமாக அரசியல் தலைவர்கள், அறிஞர்கள் பேசி வருகிறார்கள். இந்தியா மொழி வழி மாநிலங்களின் கூட்டிசைவு. இந்தியா ஒரு மொழி பேசுகிற ஒரு கலாச்சாரத்தின் நாடல்ல.

    மாநிலங்கள் மீது ஆதிக்கம்

    பல்வேறு மொழிகளில் பேசும் கூட்டிசைவு தான் இந்தியா. எனவே இதில் மாநிலங்கள் தான் அதிகாரத்தை, வளங்களை தருகின்றன. அதிகாரத்தை குவித்து கொண்டு, மத்திய அரசு மாநிலங்கள் மீது அதிகார ஆதிக்கம் செலுத்துகிறது. கவனர்கள் மூலம் இரட்டை ஆட்சி நடத்த முயற்சிக்கிறது. இந்தியாவின் கூட்டிசைவு சிதைந்தால் நாட்டின் ஒற்றுமை கேள்விக்குள்ளாகும். எனவே உலகமே வியக்கும் மகத்தான நாடு நம்முடையது. பன்முக சார்பின்மை, கூட்டிசைவு வலுப்படுத்த மாநிலங்களுக்கு கூடுதல் உரிமை அவசியம்.

    Advertisement

    மக்கள் தீர்ப்பு

    ஒன்றிய அரசும், பிரதமரும் அதிகாரத்தை குவித்து வைத்திருப்பது தேசத்திற்கு ஏற்படுத்தும் நெருக்கடி. இதை ஆராய முந்தைய அரசு நடவடிக்கை எடுத்தது. இது மாநிலத்திற்கு நல்லது. அந்த பாதையை இந்த அரசும் முன்னெடுக்க வேண்டும். மாநில உரிமைகளில் இரட்டை நிலைக்கு வாய்ப்பே இல்லை. இந்தியாவின் ஒருமைப்பாடு சார்ந்தது. மாநிலத்தின் நலன் இந்தியாவின் நலன் அடங்கியுள்ளது. அதை பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் உணரவில்லை. மக்கள் உரிய தீர்ப்பளிப்பார்கள்" என்றார்.

    English Summary

    CPI Tamil Nadu state secretary Veerapandiyan has criticized the TVK government for dissolving the high-level committee on Centre-State relations and urged it to continue the previous DMK government's efforts to strengthen state rights.