விஜய் கூறிய 3 பைலில் முதல் பைல் அன்பில் மகேஷ்.. ஒரே ஆண்டில் 400 கோடி வசூல்.. நிர்மல்குமார் பரபரப்பு

  • கோவை: லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என கூறியுள்ளனர். லஞ்சம் வாங்கியவர்களை விட மாட்டோம் என்றும் முதலமைச்சர் விஜய் கூறினார். திமுக ஆட்சியில் பள்ளிகளில் மிரட்டி வசூல் செய்த புகாரில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். தன் டேபிளில் 3 பைல் இருப்பதாக விஜய் கூறினார். அதில் முதல் இதுதான். ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு வசூல் செய்தனர் என்று நிர்மல்குமார் பரபரப்பு தகவல் கூறியுள்ளார்.

    Advertisement

    கோவை விமான நிலையத்தில் மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தேனி மாவட்டம், தேக்கம்பட்டி சிறையில் காவலர்களை தப்பியோடிய 17 கைதிகளில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். மீதமுள்ள 13 பேரை கைது செய்யும் பணி நடந்து வருகிறது. விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.
    3 வார்டன்களை கடுமையாக தாக்கி தப்பித்துள்ளனர். விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பார்டி பண்ட் என்கிற பெயரில் லஞ்சம் வாங்கியதற்காக நேற்று கைதாகியுள்ளார். ஒரே ஒரு பைலில் ரூ.400 கோடிக்கு ஊழல் செய்துள்ளனர். இது திமுகவுக்கு அவமானம். அவர்கள் விட்டு வைக்காத பள்ளியே இல்லை. முதலமைச்சர் தன் டேபிளில் 3 பைல்கள் இருப்பதாக சொன்னார். அதில் ஒரு பைல் தான் இது. இந்த ஒரு பைலுக்கே இவ்வளவு டிராமா செய்கிறார்கள். இதுக்கு திமுக வெட்கப்பட வேண்டும்.

    ஒரே ஆண்டில் ரூ.400 கோடி வசூல்

    குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சான்றிதழில் ஊழல் செய்ததற்கு வெட்கப்பட வேண்டும். திமுகவினர் நீதிமன்றத்தில், கரூரிலேயே போட்டிருக்க வேண்டும் என கூறுகிறார்கள். திமுகவில் செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் ஆதரவாளர்கள் இதை சொல்கிறார்கள். கரூரில் இவர்கள் திட்டமிட்டது என்ன. அவர்கள் திட்டமிட்டதை அவர்களை மீறி வெளியில் வர தொடங்கியுள்ளது.பள்ளிகள், மிஷனரி, தன்னார்வலர்கள் பள்ளியை மிரட்டி பணம் பறித்துள்ளனர். இப்போதுதான் பள்ளிகள் தைரியமாக புகாரளிக்க வந்துள்ளனர்.

    Advertisement

    ஒரே ஆண்டில் ரூ.400 கோடிக்கு வசூல் செய்துள்ளனர். பைலை திறங்கள் என்று முதலமைச்சருக்கு எதிர்க்கட்சி தலைவர் சவால்விட்டார். திறந்துவிட்டோம். இது ஒரு உதாரணம் தான். இன்னும் நிறைய பைல்கள் உள்ளன. அவர்கள் கூற்றுப்படி தவறு செய்யவில்லை தானே. அப்படியென்றால் சட்டப்படி வழக்கை எதிர்கொள்ளுங்கள். ரூல்ஸை பாலோ செய்வோம் என்கிறார்களே. இதில் பாலோ செய்ய சொல்லுங்க. இந்த வழக்கில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.

    நிறைய ஆதாரங்கள்

    இவ்வளவு தவறு செய்தவர்களை கைது செய்யாமல், கஸ்டடி எடுக்காமல் எப்படி விசாரணை நடத்த முடியும். திமுக ஆட்சியில் 2 ஜியில் இருந்து பல வழக்குகளில் காணாமல் போனவர்கள் ஏராளம். நீதிமன்றமே ஆதாரங்கள் உள்ளது. ஜாமீன் வழங்க முடியாது என கூறியுள்ளது. பார்டி பண்ட் வாங்கியதற்கு உரிய ஆதாரங்கள் உள்ளன. மாணவன் அகிலன் தற்கொலை வழக்கில் யார் தவறு செய்தாலும் இந்த அரசு காப்பாற்றது. யாரையும் தப்பிக்க விட மாட்டோம். இதில் சமரசமே இல்லை. சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

    English Summary

    Police arrested DMK former Minister Anbil Mahesh for collecting party fund in schools. Rs 400 crore collected in one year said Minister Nirmalkumar.