ஜிடி நாயுடுவாகவே மாறிய மாதவன்! பிரம்மாண்ட ரிலீஸுக்கு ரெடியாக இருக்கும் G.D.N.

  • சென்னை: பயோபிக் எனப்படும் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் என்பது வெறும் வரலாற்று சம்பவங்களை திரைக்கு கொண்டு வரும் முயற்சி மட்டுமல்ல. ஏனென்றால் இன்றைய பார்வையாளர்கள் உணர்வுப்பூர்வமாக ஈர்க்கும் கதைகள், பிரம்மாண்டமான காட்சியமைப்பு மற்றும் உண்மைத்தன்மை கொண்ட அணுகுமுறையையே அதிகம் எதிர்பார்க்கின்றனர். அப்படிப்பட்ட அனைத்து அம்சங்களையும் கொண்ட படமாகவே G.D.N. உருவாகி வருகிறது.

    Advertisement

    இந்த படம் இந்தியாவின் முன்னணி கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராகவும், தொழில்துறை வளர்ச்சியின் தொலைநோக்கு பார்வையை கொண்டவராகவும் கருதப்படும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கைக் கதையை சொல்கிறது. பொறியியல், போக்குவரத்து மற்றும் உற்பத்தி துறைகளில் அவரது பங்களிப்புகள் நன்கு அறியப்பட்டவை என்றாலும், அவரது வாழ்க்கை இதுவரை திரைப்படங்களில் பெரிதாக சொல்லப்படவில்லை.

    Advertisement

    G.D.N

    ஆர். மாதவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்குகிறார். தான் வாழ்ந்த காலத்தைவிட பல தலைமுறைகள் முன்னோக்கி சிந்தித்த ஒரு மனிதருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்த படம் உருவாகியுள்ளது. இது பார்வையாளர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான திரை அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

    இந்த திட்டத்தின் மிக பெரிய பலம் என்றால் அது இந்த படத்தை உருவாக்கிய டீம்.. அர்த்தமுள்ள கதைகளை தொடர்ந்து தயாரித்து வரும் டிரைகலர் ஃபிலிம்ஸ் நிறுவனமும், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன. மாதவனுடன் ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து கோவிந்த் வசந்தாவின் இசையும் கதைக்கு கூடுதல் பூஸ்ட்டாக அமையும்!

    Advertisement

    தனித்துவமான கதை

    நடிகர்கள் இந்த படத்தை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அதேநேரம் படத்தின் மையக்கருவும் கூட தனித்துவமானது. ஜி.டி. நாயுடு ஒரு கண்டுபிடிப்பாளர் மட்டுமல்ல.. அவர் தொழில்முனைவோர், கல்வியாளர் மற்றும் தொழில்துறை முன்னோடி என பல முகங்களை கொண்டவர். அவர் செய்த பணிகள் பல தலைமுறை பொறியாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு ஊக்கமளித்துள்ளன. இப்போதும் ஊக்கமளித்து கொண்டு இருக்கிறது.

    இந்தத் திரைப்படம் ஒரு பக்கம் அவரது சாதனைகளை பதிவு செய்கிறது. அதேநேரம் மற்றொருபுறம் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும் எப்படி அவர் தொடர்ந்து புதுமைகளை உருவாக்க உருவாக்கினார். அவரது மனவலிமை எப்படி இருந்தது என்பதை இன்னொரு பக்கம் திரைக்கு கொண்டு வருகிறது.

    Advertisement

    படம் சொல்வது என்ன!

    வரலாற்று சம்பவங்களை மட்டும் மையமாகக் கொண்ட படமாக இல்லாமல், ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை வரையறுத்த புதுமை சிந்தனையை ஆராயும் முயற்சியாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

    G.D.N. ஒரு சுவாரஸ்யமான படமாக அமையக்கூடும். இளம் தலைமுறைக்கு இந்தியாவின் மிக சிறந்த கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரை அறிமுகப்படுத்தும் வாய்ப்பாகவும் இது இருக்கும். நிஜ வாழ்க்கை நாயகர்களை சினிமாவின் சக்தியின் மூலம் கொண்டாடும் மற்றொரு பெரு முயற்சியாகவும் இது அமைகிறது.

    படத்தின் ரிலீஸ் நெருங்கும் சூழலில், G.D.N. ஏற்கனவே அதிகம் பேசப்படும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.. இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்துறை வரலாற்றின் ஒரு முக்கிய அத்தியாயத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் படமாகவும் இது அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

    English Summary

    Starring Madhavan as legendary inventor G.D. Naidu, G.D.N. is gearing up for release: திரைக்கு வர ரெடியாக இருக்கும் ஜிடி நாயுடு படம்!