ஆசிரியரை கைது செய்யாமல்.. மகனின் உடலை வாங்க மாட்டோம்! கோவை மாணவரின் பெற்றோர் உறுதி!

  • கோயம்புத்தூர்: கோவை பள்ளி மாணவர் மரணத்தில், ஆசிரியரை கைது செய்யாமல் உடலை வாங்க மாட்டோம் என மாணவனின் பெற்றோர் உறுதியாக கூறியிருக்கிறார்கள்.

    Advertisement

    கோயம்புத்தூர் பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்று வந்த 11ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்திருக்கிறார். சாதிய வன்கொடுமை காரணமாகவே மாணவர் தற்கொலை செய்துக்கொண்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். மட்டுமல்லாது இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை மகனின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறியிருக்கின்றனர்.

    Advertisement

    இது குறித்து பெற்றோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "பள்ளியின் முன்னாள் மாணவர்களும் இதே குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்கள். இன்னும் எத்தனைப்பேர் வந்து சொல்லணும்? எத்தனைப்பேரை எதிர்பார்க்கிறீர்கள்? யாரை மறைத்து வைத்திருகிக்கிறீர்கள்? யாரை காப்பாற்ற நினைக்கிறீர்கள்? இந்த விஷயம் தெரியும் வரை நாங்கள் என் மகனை வாங்க மாட்டோம்.

    ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்துவிட்டோம் என்று கூறுகிறார்கள். ஆனால், இன்னும் அவர்களை கைது செய்யவில்லை. போதிய ஆதாரம் வேண்டும் என்று சொல்கிறார்கள். மாணவர்கள் 2 பேரை கைது செய்திருக்கிறார்கள். என் மகன் இறந்திருக்கிறார். எனவே விஜயகுமார் மற்றும் அருண்குமார் என இரண்டு ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும். அவர்களை கைது செய்துவிட்டால் போதும்.. நாங்கள் மகனின் உடலை வாங்கிக்கொள்கிறோம்.

    Advertisement

    என்னுடைய மகனுக்கு நடந்தை போல இனி யாருக்கும் நடக்கக்கூடாது. இதுதான் எங்களுடைய கோரிக்கை. ஆசியர்களை விசாரணைக்குதான் அழைத்து சென்றிருக்கிறார்கள். இன்னும் கைது செய்யவில்லை. எத்தனை நாட்கள் ஆனாலும் சரி.. அவர்கள் கைது செய்யப்படும் வரை நாங்கள் காத்திருக்கிறோம். என் மகன் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும். செய்திகளில் ஆசிரியர் கைது என்று வருகிறது. ஆனால், அவர்கள் விசாரணைக்குதான் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்" என்று வேதனையுடன் கூறுகிறார்.

    தாழ்த்தப்பட்ட சாதி என்பதால் பொய் வழக்கு.. ஐஐடி மாணவர் தற்கொலை விவகாரம்.. மாணவரின் தந்தை பரபர புகார்!

    என்ன நடந்தது?

    வகுப்பறையில் ஆசிரியர் விஜயகுமார் என்பவர் யாரெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அப்போது மாணவர் அகிலன் கையை உயர்த்தவே.. மற்ற மாணவர்கள் அகிலனை சாதி ரீதியில் இழிவுப்படுத்தி தாக்கியதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    இந்த சம்பவம் தொடர்பாக அகிலனின் பெற்றோர் தலைமையாசிரியரிடத்தில் புகார் அளித்திருக்கின்றனர். ஆனால், அவர் உரிய நடவடிக்கை எடுக்காததால்தான் தனது மகன் அகிலன் உயிரிழந்திருக்கிறார் என்று பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.

    English Summary

    Coimbatore student: Regarding the death of a school student in Coimbatore, the boy's parents have firmly stated that they will not accept his body unless the teacher is arrested.