கடலூரில் ஏசி மிஷினில் உஷ் உஷ் சத்தம்.. திறந்தால் நல்ல பாம்பு! மடித்த குடைக்குள்ளும் அதே 4 அடி ஷாக்

  • கடலூர்: கடலூரில் ஏ.சி. மிஷினில் இருந்து வித்தியாசமான சத்தம் வந்துள்ளது.. ஊழியர்கள் அருகில் சென்று பார்த்தபோது, நல்ல பாம்பு ஒன்று ஜம்மென்று போஸ் கொடுத்து கொண்டிருந்தததாம்.. இதே கடலூர் பகுதியில், இன்னொரு வீட்டில் மடித்து வைக்கப்பட்டிருந்த குடைக்குள்ளும் இதேபோல் ஒரு பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    கடலூர் முதுநகர் அருகே சிப்காட் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.. நேற்று வழக்கம்போல் நிறுவனத்தில் வேலைகள் நடந்து கொண்டிருந்த நிலையில், கீழ்தளத்தில் இருந்த ஏ.சி. மிஷின் ஒன்றை ஊழியர்கள் இயக்கியுள்ளனர்.

    Advertisement

    கடலூர் ஏசி மெஷினில் நல்ல பாம்பு

    அப்போது அந்த ஏ.சி.யில் இருந்து தொடர்ந்து "உஷ்... உஷ்..." என்று வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. முதலில் ஏ.சி. மிஷினில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்றுதான் ஊழியர்கள் நினைத்துள்ளனர். ஆனால் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்ததாலும், வித்தியாசமான சத்தமாக இருந்தாலும், ஏ.சி.யை கவனமாக பார்த்துள்ளனர்.

    அப்போதுதான் ஏ.சி. எந்திரத்துக்குள் ஒரு நல்ல பாம்பு சுருண்டு கிடந்தது தெரியவந்துள்ளது. இதைப் பார்த்ததும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பாம்பு பிடிக்கும் வீரர் செல்லாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த செல்லா, ஏ.சி. எந்திரத்துக்குள் சிக்கியிருந்த சுமார் 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பத்திரமாக மீட்டார். இதனால் ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.

    Advertisement

    குடைக்குள் பாம்பு

    இதேபோல் கடலூர் அருகே கீழ்அழிஞ்சிப்பட்டு கிராமத்திலும் வித்தியாசமான முறையில் ஒரு நல்ல பாம்பு சிக்கியுள்ளது. அங்கு பால் வியாபாரி ஒருவரின் வீட்டில் குடை ஒன்றை மடித்து வைத்திருந்துள்ளனர்.

    கொஞ்ச நேரத்தில் அந்த குடையில் இருந்து ஒருவித சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் குடையை கவனமாக பார்த்துள்ளனர். குடையை மடித்து வைத்திருந்த இடத்துக்குள் சுமார் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று சுருண்டு கிடந்தது தெரியவந்தது.

    ஒரே நாளில் 2 பாம்புகள்

    இதுகுறித்தும் செல்லாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் அங்கு சென்று, குடையுடன் பாம்பையும் வீட்டுக்கு வெளியே பாதுகாப்பாக கொண்டு வந்து, பின்னர் பாம்பை பிடித்தார் செல்லா.

    Advertisement

    2 இடங்களிலும் ஒரே நாளில் 2 நல்ல பாம்புகள் சிக்கியுள்ளன.. ஆனால், யாரையும் கடிக்காமல் சிக்கியது அதிர்ஷ்டமாக பார்க்கப்பட்டது. பிறகு மீட்கப்பட்ட இரண்டு பாம்புகளும் கடலூர் அருகே உள்ள காட்டுப் பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டன. ஏ.சி. எந்திரத்துக்குள் பாம்பு புகுந்ததும், வீட்டில் மடித்து வைத்திருந்த குடைக்குள் பாம்பு பதுங்கியிருந்ததும் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இருட்டு, குறுகிய இடம்

    பெரும்பாலும் பாம்புகள் இருட்டாகவும், குறுகிய இடமாகவும் இருக்கும் பகுதிகளில் பதுங்கிக்கொள்ளும். ஏசி மிஷினுக்குள்ளும் இருட்டான, குறுகிய இடங்கள் இருப்பதால், அதற்குள் பாம்பு ஒளிந்திருக்க வாய்ப்புள்ளது. இதேபோல் மடித்து வைக்கப்பட்ட குடையிலும் இருட்டான, குறுகிய இடங்கள் இருப்பதால், அதன் பல மடிப்புகளுக்கு இடையே பாம்பு பாதுகாப்பாக பதுங்கியிருக்கலாம்.

    Advertisement

    விறகுக் கட்டைகளுக்கு இடையிலும் இதுபோல் பாம்புகள் பதுங்கிக் கொள்வது உண்டு. அதேபோல் எலி, தவளை, பல்லி போன்றவை இருக்கும் இடங்களுக்கும் இரை தேடி பாம்புகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

    எனவே, நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை எடுப்பதற்கு முன்பும், இருட்டான அல்லது எளிதில் கண்ணுக்குத் தெரியாத இடங்களில் கையை விடுவதற்கு முன்பும் கவனமாக பரிசோதித்துக் கொள்வது அவசியம்...!!

    English Summary

    Cuddalore AC Machine “Ush Ush” Sound.. Opened to Find a Cobra.. Then Another 4-Foot Shock Inside a Folded Umbrella