கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமத்தில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாகவும், மீறி ஊருக்குள் போனால் மிரட்டல் விடுப்பதாகவும் மாவட்ட எஸ்ப அலுவலகத்தில் தம்பதி புகார் அளித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், சாமியார் பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (73). இந்த கிராமத்தில் இவர்கள் பயன்படுத்தி வந்த நிலத்தை ராஜகுமாரும், அவரது மனைவியும் வெளிநாடு சென்றிருந்த நேரத்தில் அந்த ஊரைச் சேர்ந்த நபர்கள் ஆக்கிரமிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கிராம பஞ்சாயத்து தலைவரின் உதவியோடு ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி இருவரையும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருக்கிறார்களாம். இவர்களுடன் யாரும் பேசக்கூடாது, தம்பதி கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தக் கூடாது என்று ஒலிபெருக்கி மூலம் அறிவித்துள்ளனர். கடந்த இரண்டு நாள்களாக ஊருக்குள் சென்றாலே மிரட்டல் விடுவதாகவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கணவன்- மனைவி புகார் அளித்தனர். 2026-ஆம் ஆண்டிலும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இலவச வேட்டி எப்படி சபரிமலைக்கு சென்றது? ரூ.300க்கு இருமுடி பை.. பம்பையில் அதிர்ந்த கடலூர் பக்தர்