கடலூரில் மாத்திரையுடன் சேர்த்து தனிமையையும் விழுங்கிய தம்பதி.. காட்டுமன்னார்கோவிலில் இப்படியுமா?

  • கடலூர்: கடலூர் சம்பவத்தை பார்த்தீங்களா? பெற்ற பிள்ளையே அருகில் இருந்தும், வயதான பெற்றோரின் மனதில் எவ்வளவு பெரிய வெறுமை இருந்திருக்கும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. முதுமையில் தனிமை என்பது வார்த்தைகளால் சொல்ல முடியாத வலி.. பெற்றோர்கள் மனம் திறந்து சொல்லாவிட்டாலும், அவர்களின் அமைதிக்குள் ஆயிரம் ஏக்கங்கள் இருக்கலாம்.. அந்த அமைதியை புரிந்துகொண்டு, வயதான காலத்தில் அவர்களுக்கு துணையாக இருப்பதே பிள்ளைகளின் மிகப்பெரிய கடமை...!!

    Advertisement

    எத்தனையோ பிள்ளைகள் பெற்றோர்களை வயதான காலத்தில் நடுத்தெருவில் விட்டுவிடுகிறார்கள்.. சொத்துகளை பிடுங்கிக்கொண்டு, வாழ வழியில்லாமல் நிர்க்கதியாக்கிவிடுகிறார்கள்.

    Advertisement

    பிள்ளைகளால் கைவிடப்பட்ட சில பெற்றோர்கள் தங்கள் வேதனையை மனதில் சுமந்தபடி கலெக்டரிடம் முறையிடுகிறார்கள்.. அதிகாரிகளிடம் கண்ணீர் வடித்து தங்கள் நிலைமையை சொல்லி கதறுகிறார்கள்...

    ஆதரவற்ற பிள்ளைகள்

    ஆனால், எல்லா பெற்றோர்களாலும் பிள்ளைகளை எதிர்த்து கேள்வி கேட்க முடிவதில்லை.. அவர்களும் ஒருவகையில் வாயில்லா ஜீவன்கள்தான். பிள்ளைகள் என்ன செய்தாலும் மனதுக்குள்ளேயே புதைந்து அழுகிறார்கள்.. தங்கள் வேதனையை யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.. இரவில் தூக்கத்தை தொலைக்கிறார்கள்.. சில நேரங்களில் அந்த துயரமே அவர்களின் உயிரையும் பறித்துவிடுகிறது.

    அப்படியொரு சோகமான சம்பவம்தான் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் நடந்துள்ளது... காட்டுமன்னார்கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் 88 வயதான லோகநாதன். இவரது மனைவி கஸ்தூரிக்கு 78 வயது. இந்த தம்பதிக்கு சரவணன் என்ற 58 வயது மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    Advertisement

    மகளுக்கு திருமணமாகி கள்ளக்குறிச்சியில் வசித்து வருகிறார். மகன் சரவணன் காட்டுமன்னார்கோவில் நகரப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருவதுடன், அதே தெருவில் தனியாக வசித்து வந்துள்ளார். இதனால் லோகநாதனும் கஸ்தூரியும் தங்களது சொந்த வீட்டில் வசித்து வருகிறார்கள்..

    மாத்திரைகளை சாப்பிட்ட தம்பதி

    வயது முதிர்ந்த நிலையில் 2 பேருமே உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதற்காக பல வருடங்களாகவே மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறார்கள்.. ஆனால், மகன் சரவணன், இவர்களை சரிவர கவனிப்பதில்லையாம்.. வயதான காலத்தில் உடல்நலப் பிரச்சனைகளும் அதிகமாகி கொண்டே போயிருக்கிறது.. நோயின் தீவிரம் ஒருபுறம், பிள்ளையின் அரவணைப்பு இல்லாத என்ற ஏக்கம் மறுபுறம் என மன உளைச்சலில் இருந்துள்ளனர்.

    Advertisement

    ஒருகட்டத்தில் இப்படி அல்லல்பட்டு வாழ்வதைவிட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்தனர்.. இதற்காக நேற்று முன்தினம் இரவு லோகநாதனும் கஸ்தூரியும் தூங்க சென்றுள்ளனர்.. அப்போது தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக இருவருமே சாப்பிட்டுவிட்டார்கள்.. நேற்று காலை வீட்டுக்கு வந்த சரவணனின் மனைவி லதா, இருவரையும் எழுப்பியுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர்கள் எழுந்திருக்கவில்லை. மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து லதா அதிர்ச்சியடைந்தார்.

    தீவிர சிகிச்சை

    உடனடியாக தனது கணவர் சரவணனுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த சரவணன், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் பெற்றோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு மேல் சிகிச்சைக்காக இருவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    Advertisement

    ஆனால், டாக்டர்கள் எவ்வளவோ சிகிச்சை தந்தும் பலனளிக்கவில்லை. அங்கு 2 பேருமே பரிதாபமாக இறந்துவிட்டனர்.. இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போதுதான் லோகநாதனும் கஸ்தூரியும் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டது அனைவருக்கும் தெரியவந்துள்ளது.. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதுமையின் கொடுமை

    வயதான காலத்தில் பெற்றோருக்கு தேவைப்படுவது பெரிய வசதிகளோ, பணமோ மட்டுமல்ல.. 4 வார்த்தை அன்பாக பேசும் பிள்ளைகள்தான்... அருகிலிருந்தும் தனிமையில் தவிக்கும் முதியவர்களின் மனதை புரிந்துகொள்வது மிக மிக முக்கியம்..

    முதுமையில் தனிமை வாழ்க்கை கொடியது.. உடனிருப்பவர்களின் அன்பும், அரவணைப்பும் இல்லாதபோது அந்த வலி இன்னும் கொடுமையாகிவிடுகிறது. பெற்றோர்கள் எதையும் கேட்காமல் இருக்கிறார்கள் என்பதற்காக, அவர்களுக்கு எதுவும் தேவையில்லை என்று அர்த்தமில்லை.. ஒரேயொரு பாசமான வார்த்தைக்காக அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கலாம்...!!!

    English Summary

    Cuddalore Couple Swallows Pills Along With Loneliness.. What Happened in Kattumannarkoil?