கடலூர்: கடலூர் ஆற்றில் விநாயகர் சிலை விஜர்சனம் செய்துவிட்டு வீடு திரும்ப வேண்டிய நேரத்தில், முதியவர் ஒருவருக்கு திடீரென அந்த விஷயம் ஞாபகத்துக்கு வந்திருக்கிறது. விநாயகர் கழுத்தில் தங்க செயின் போட்டிருந்தது அப்போதுதான் அவருக்கு நினைவுக்கு வந்துள்ளது.. ஆனால் அதற்குள் விநாயகர் சிலை ஆற்றுக்குள் சென்றுவிட்டது... உடனே பதற்றத்தில் அந்த நபர் அலறியது, கடலூரில் பெரும் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. அப்படி என்ன நடந்தது?
நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து மக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
தொடர்ந்து 3-வது நாளான நேற்று அதாவது செப்டம்பர் 16-ம் தேதி, வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் விஜர்சனம் செய்யப்பட்டன. அதன்படி கடலூர் நகரைச் சேர்ந்த பலரும் தேவனாம்பட்டினம் அருகே உள்ள உப்பனாற்றுக்கு விநாயகர் சிலைகளை கொண்டு சென்றார்கள்.. அங்கு சிலைகளை வைத்து பூஜை செய்து விட்டு, பின்னர் ஆற்றில் ஒவ்வொன்றாக கரைத்தனர். அந்தவகையில், கடலூர் மாவட்டம் வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தியும் (வயது 62) விநாயகர் சிலையை விஜர்சனம் செய்வதற்காக உப்பனாற்றுக்கு சென்றுள்ளார். அவர் கொண்டு வந்த விநாயகர் சிலைக்கு ஒன்றரை சவரன் தங்க செயினை ஏற்கனவே அணிவித்திருந்தார் போலும்.. ஆனால், இதுதெரியாமல், சிலையை ஆற்றில் வீசி விஜர்சனமும் செய்துவிட்டார். கொஞ்ச நேரம் கழித்துதான், அவருக்கு அந்த தங்க செயின் நினைவுக்கு வந்திருக்கிறது. அய்யய்யோ.. சிலைக்கு செயின் போட்டிருந்தேனே என்று அலறினார்.. ஆனால், சிலை ஏற்கனவே ஆற்றுக்குள் போய்விட்டதால், செயினும் அதனுடன் சேர்ந்து தண்ணீருக்குள் போயிவிட்டதை நினைத்து தவித்தார்... உடனே அங்கிருந்த போலீசார், ராமமூர்த்தியிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர்.. அப்போதுதான், விநாயகர் சிலைக்கு ஒன்றரை சவரன் தங்க செயின் அணிவித்திருந்ததையும், சிலையை ஆற்றில் கரைத்த பிறகுதான் அது நினைவுக்கு வந்ததாகவும் சொன்னார்.. இதையடுத்து போலீசார் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் உப்பனாற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர்... விநாயகர் சிலையுடன் ஆற்றுக்குள் சென்ற தங்க செயினை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்பதற்காக தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடினார்கள்.. அவர்களுடன் அங்கிருந்த பொதுமக்களும் சேர்ந்து ஆற்றுக்குள் இறங்கி செயினை தேடினார்கள். காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் எட்டரை மணி நேர தேடியும் கடைசிவரை நகை கிடைக்கவில்லை.. விநாயகர் சிலையும் கிடைக்கவில்லை.. நகை கிடைக்காததால் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ராமமூர்த்தி ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பினார்.. எனினும், தங்க செயின் கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பில் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து உப்பனாற்றில் நகையை தேடி கொண்டிருக்கிறார்கள்.. விநாயகர் சிலைக்கு அணிவித்திருந்த ஒன்றரை சவரன் தங்க செயின், சிலையை விஜர்சனம் செய்த பிறகுதான், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிக்கு நினைவுக்கு வந்த சம்பவம் கடலூரில் பேசுபொருளாகியுள்ளது...!!!கடலூர் விநாயகர் சதுர்த்தி
ஒன்றரை சவரன் தங்க நகைஉப்பனாற்றில் தேடிய அரசு அதிகாரி