கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்பு இளைஞர்கள் இருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களைக் கீழே தள்ளி, தலையில் எட்டி உதைத்து சிலர் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காலத்தில் இளைஞர்களிடையே மது பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கல்லூரிக்குச் செல்லும் நேரத்தில் மது குடித்துவிட்டு ஆட்டம் போடும் சம்பவங்களும் தாக்குதலில் ஈடுபடும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி முன்பு இரு தரப்பு இளைஞர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு, புதுவை மணமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மதுபானக் கடையில் மது குடிப்பதில் மோதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அங்கு மது குடித்துக் கொண்டு இருந்தபோது, இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது பெரிதாகப் பிரச்சினை ஏற்படவில்லை. ஆனால், இரு நாட்கள் கழித்து இப்போது இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. கல்லூரிக்குச் சென்றபோது மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில் ஒரு தரப்பு இளைஞர்களை மற்றொரு தரப்பினர் மிகக் கொடூரமாக அடித்துத் தாக்கியுள்ளனர். இரு இளைஞர்களைக் கீழே தள்ளி உதைத்துள்ளனர். அவர்கள் கீழே விழுந்த பிறகும்.. இளைஞர்களின் தலையில் காலால் எட்டி உதைத்துள்ளனர். பிறகு அவர்கள் பைக்குகளில் தப்பியோடினர். இந்த கொடூரத் தாக்குதலை அங்கிருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். பேருந்தில் பயணம் செய்தவர்கள் இந்த மோதலை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். அது இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் கடலூர் மாவட்டப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக போலீசார் 3 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இதற்கு நடுவே சிதம்பரத்தில் பட்டப் பகலில் படுகொலை என சொல்லி இந்த வீடியோவை சிலர் பரப்பி வருகிறார்கள். அதாவது இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதாகச் சொல்லி இந்த வீடியோவை பரப்பிய நிலையில், காடாம்புலியூர் காவல்துறையினர் இது குறித்து விளக்கம் கொடுத்தனர். கொலை என்பது தவறான தகவல் என்றும் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக 4 பேரைக் கைது செய்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மோகன், கௌதம், சூர்யா ஆகிய மூன்று பேரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.மோதல்
என்ன நடந்தது!
போலீஸ் விளக்கம்