கடலூரில் ஹைட்ரோகார்பன் சர்ச்சை.. கடலுக்குள் 18 கிமீ தொலைவில் 4 புதிய கிணறுகள் அமைக்கத் திட்டம்!

  • கடலூர்: கடலூர் அருகே 4 புதிய ஹெட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. ஏற்கனவே உள்ள கிணறுகளில் எண்ணெய் இருப்பு குறைந்த நிலையில், புதிய கிணறு அமைக்க கடலூர ஒழுங்குமுறை ஆணையத்திடம் இந்துஸ்தான் நிறுவனம் அனுமதி கோரி மனு அளித்துள்ளது. இந்த புதிய கிணறுகளை ரூ.425 கோடி மதிப்பீட்டில் அமைக்க இந்துஸ்தான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் டெல்டா மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோர மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து எதிர்ப்புகள் நிலவி வரும் சூழலில், கடலூர் அருகே மேலும் 4 புதிய ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகளை அமைக்க இந்துஸ்தான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    Advertisement

    ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள கிணறுகளில் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் இருப்பு கணிசமாக குறைந்துள்ள நிலையில், இந்த புதிய கிணறுகளை அமைப்பதற்கான அனுமதியை வழங்குமாறு கடலூர சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை ஆணையத்திடம் அந்நிறுவனம் மனு அளித்துள்ளது. இந்துஸ்தான் நிறுவனம் தனது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியைத் தொய்வின்றித் தொடர புதிய இடங்களை ஆழ்கடல் பகுதியில் கண்டறிந்துள்ளது.

    இந்த புதிய 4 ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகளும் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில், ஆழ்கடல் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய கிணறுகளில் எண்ணெய் இருப்பு குறைந்துள்ளதால், உற்பத்தியை அதிகரிக்க இந்த ஆழ்கடல் திட்டத்திற்காக சுமார் ரூ.425 கோடி முதலீடு செய்ய இந்துஸ்தான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    Advertisement

    கடலுக்குள் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பதற்கான ஆரம்பகட்ட துளையிடும் பணிகளை தொடங்குவதற்கு முன்னதாக, மத்திய-மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் மற்றும் கடல்சார் ஒழுங்குமுறை அனுமதிகளைப் பெற வேண்டும். இதன்படியே, கடலூர் மாவட்ட ஒழுங்குமுறை ஆணையத்திடம் விரிவான திட்ட அறிக்கையுடன் இந்துஸ்தான் நிறுவனம் முறைப்படி விண்ணப்பித்துள்ளது.

    ஏற்கனவே காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்குக் கடுமையான எதிர்ப்புகள் இருந்து வரும் நிலையில், பரங்கிப்பேட்டை ஆழ்கடல் பகுதியில் ரூ.425 கோடி மதிப்பில் 4 புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்கத் தனியார் நிறுவனம் அனுமதி கோரியுள்ள விவகாரம், கடலோரப் பகுதி மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    English Summary

    Hydrocarbon Project in Cuddalore: HOEC Seeks Nod for 4 New Offshore Oil Wells Worth ₹425 Crore Near Parangipettai