கடலூரில் போலீஸ் இன்ஸ்பெக்டரை காலரை பிடித்து இழுத்து சென்ற இளைஞர்.. வைரலாகும் வீடியோ

  • கடலூர்: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற நபர், காவல் ஆய்வாளரின் சட்டை காலரை பிடித்து இழுத்துச் சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது, காவல் அதிகாரிகளுக்கே போதிய பாதுகாப்பு இல்லையா என்று? விசாரணையின் போது காவலர்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளது. நேற்று முன்தினம் தேனியில் சிறப்பு சார்பு காவல் ஆய்வாளருக்கு நடந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்த சம்பவம் கேள்விகளை எழுப்பி உள்ளது.

    Advertisement

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஒருவரை காவல்துறையினர் அழைத்துச் சென்றபோது, அந்த நபர் காவல் ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

    Advertisement

    அப்போது அந்த நபரை காவல் ஆய்வாளர் பிடித்து அழைத்துச் செல்ல முயன்றபோது, அந்த நபர் திடீரென ஆய்வாளரின் சட்டை காலரை பிடித்து இழுத்துச் செல்லும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    காவல் துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் பணியாற்றி வரும் நிலையில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் நபர்களிடமிருந்து காவல் அதிகாரிகளுக்கே இதுபோன்ற எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்படுவது காவலர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

    குறிப்பாக, விசாரணைக்காக நபர்களை அழைத்துச் செல்லும்போது போதிய காவலர்கள் உடன் செல்கிறார்களா? இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

    Advertisement
    சொன்னபடியே செய்த பிக்பாஸ் பாலாஜி.. போலீஸ் வந்த சிசிடிவியை ரிலீஸ் பண்ணிட்டாரே.. பெரிய ட்விஸ்ட்!

    சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் காவல்துறையினரின் பாதுகாப்பையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தின் முழுமையான பின்னணி, சம்பந்தப்பட்ட நபரின் விவரம் மற்றும் காவல்துறையின் அதிகாரப்பூர்வ விளக்கம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது பற்றி கருத்து தெரிவித்த ஒரு நெட்டிசன், "காவல்துறையினர் மீதே கை வைக்கும் துணிச்சல் அவர்களுக்கு எங்கிருந்து வந்தது? கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் பகுதியில், மோதல் ஒன்றைத் தடுத்து நிறுத்தச் சென்ற காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் மீது, இளைஞர்கள் குழு ஒன்று கொடூரமான மற்றும் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியது. இந்தச் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்றில், மதுபோதையில் இருப்பதாகத் தோன்றும் இளைஞர் ஒருவர், காவல் ஆய்வாளர் வேலுமணியைத் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன" என்று கூறியுள்ளார்.

    English Summary

    Cuddalore: Where did they get the audacity to lay a hand on the police? In the vicinity of Nellikuppam in Cuddalore district, a group of youths launched a brutal, indiscriminate attack on police personnel—including a police inspector—who had arrived to intervene and prevent a clash. Amidst the resulting commotion, a video has emerged showing a youth, appearing to be under the influence of alcohol, assaulting the police inspector, Velumani.