வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்கள் இன்று தாயகம் வருகிறது

  • சென்னை: வியட்நாமில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் அங்கு சுற்றுலா சென்ற தமிழகர்கள் 10 பேர் உள்பட 15 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து நாடு முழுக்க பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்களும் இன்று இரவு மும்பை விமான நிலையம் வந்தடையும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு அவரவர் சொந்த ஊர்களுக்கு உடல்கள் கொண்டு செல்லப்படும் என தெரிவித்துள்ளது.

    Advertisement

    தாய்லாந்துக்கு இணையான சுற்றுலா வசதிகள் கொண்ட வியட்நாமில் படகு சவாரி சென்ற இந்தியர்கள் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தமிழகம், கேரளா, ஆந்திராவை சேர்ந்த பலரும் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடன் வியட்நாமில் படகு சவாரி சென்ற நிலையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அங்கு அன் தோய் எனப்படும் தீவுக்கூட்டங்களில் உள்ள தீவுகளுக்கு இடையே படகு சவாரி மேற்கொண்டபோது இந்த விபத்து அரங்கேறியது.

    Advertisement

    இன்று இரவு மும்பை வந்தடையும்

    இதில் தமிழர்கள் 10 பேர் உள்பட மொத்தம் 15 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீதர், ஜெயலட்சுமி உள்பட 3 பேரும், கேரளாவை சேர்ந்த 2 பேரும் உயிரிழந்தனர். அவர்கள் உடலை இந்தியா கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் இன்று இரவு 9 மணியளவில் உயிரிழந்த 15 பேரின் உடல்களும் இந்தியா கொண்டு வரப்படும் என இந்திய தூதரகம் மற்றும் ஹோ சி மின் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக வெளியிடப்பட்ட ட்வீட் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள் உள்பட 15 இந்தியர்களின் உடல்கள் இன்று இந்தியா கொண்டு வரப்படுகின்றன. வியட்நாம் ஏர்லைன்ஸ் VN979 விமானம் மூலம், உயிரிழந்த 15 இந்தியர்களின் உடலும் ஹோ சி மின் நகரில் இருந்து கொண்டு வரப்பட உள்ளன. வியட்நாம் நேரப்படி மாலை 6 மணிக்கு அங்கிருந்து புறப்படும் விமானம், மும்பை விமான நிலையத்திற்கு இன்று இரவு 9.35 மணிக்கு வந்து சேரும்.

    தமிழக அரசு ஏற்பாடு

    இந்தியா வந்த பிறகு அவர்களது உடல்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தகவல் தெரிவித்து இருக்கிறது. மேலும் மாநில அரசுகள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் இணைந்து அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழக அரசு சார்பில் உயிரிழந்த 10 பேரின் உடல்களை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் தமிழகம் வந்தடைந்ததும், சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு முழு வீச்சில் செய்து வருகிறது. இதற்காக வருவாய்த் துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட தாசில்தார்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஒருங்கிணைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சொந்த ஊர் கொண்டு செல்ல ஏற்பாடு

    தமிழகத்தில் திண்டுக்கல், தர்மபுரி, திருச்சி, வேலூர், திருவள்ளூர் என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளதால் உயிரிழந்தவர்களின் உடல்களை விமான நிலையத்திலிருந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல தேவையான அனைத்து வசதிகளும் தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டு வருகின்றன. முன்னதாக தமிழக அரசின் சிறப்பு அதிகாரியும், சேலம் சரக டிஐஜியுமான சந்தோஷ் ஹதிமானி வியட்நாம் சென்றார்.

    Advertisement

    அங்கு இந்திய தூதரக அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு, உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உடல்களை தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டார்.

    English Summary

    Indian tourist bodies: The mortal remains of 15 Indians who died in the Vietnam boat accident will be flown to Mumbai today from Ho Chi Minh City. State governments have been asked to coordinate with families and ensure transportation to their hometowns.