ஸ்கிரீன் போடப்பட்ட ஸ்லீப்பர் பஸ்ஸில் உதவி கேட்டு ஏறிய 16 வயது பெண்! 47 கி.மீ வரை டெல்லியில் பயங்கரம்

  • டெல்லி: டெல்லியில் மனிதகுலத்தையே தலைகுனிய செய்யும் ஷாக்கிங் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.. உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது பள்ளி மாணவியை, படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் பஸ்ஸில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள் கயவர்கள்.. நாட்டின் தலைநகரிலேயே இப்படியொரு கொடுமை நடந்துள்ளது, பெரும் கொந்தளிப்பையும் ஆத்திரத்தையும் பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகிறது.

    Advertisement

    கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி, 16 வயது சிறுமிக்கு தன்னுடைய குடும்பத்தினருடன் சின்ன கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.. இதனால் கோபித்து கொண்டு, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்..

    Advertisement

    நொய்டாவில் உள்ள தன்னுடைய சொந்தக்காரரிடம் போகலாம் என்று நினைத்து அங்கு கிளம்பியுள்ளார்.. அப்போது கனமழை பெய்துள்ளது.. இருள் சூழ்ந்த நேரம்.. கிரேட்டர் நொய்டா பாரி சௌக் பகுதிக்கு வந்திருக்கிறார். அங்கு ஸ்லீப்பர் பஸ் ஒன்று காலியாக வந்துள்ளது.. உடனே சைகை காட்டி உதவிக்காகச் நிறுத்தியுள்ளார்.

    படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் பஸ்

    டிரைவர் குல்தீப், கண்டக்டர் சந்தீப் ஆகியோர் சிறுமியை பஸ்ஸில் ஏற்றியுள்ளனர்.. ஆனால் பஸ்ஸில் சிறுமி தவிர வேறு யாருமே இல்லை.. இந்நிலையில், பஸ் திடீரென ரிப்பேராகிவிடவும், கிரேட்டர் நொய்டாவில் உள்ள சூரஜ்பூர் ஒர்க்ஷாப்பில் பழுது பார்த்துள்ளனர்.. பிறகு அந்த பணிகளை முடித்துவிட்டு, அந்த வெறுமையான ஸ்லீப்பர் பஸ்ஸை, டெல்லியில் உள்ள திமார்பூருக்கு ஓட்டி சென்றுகொண்டிருந்தனர்.

    Advertisement

    பழுதுபார்ப்பு பணிக்காகக் கொண்டு செல்லப்பட்டதால் அந்த பஸ்ஸில் வேறு பயணிகளையும் ஏற்றிக்கொள்ளவில்லை.. நொய்டா செக்டர்-63க்குச் செல்வதாக கூறித்தான், சிறுமியை மட்டும் டிரைவரும், கண்டக்டரும் சிறுமியை பஸ்ஸில் ஏற்றியுள்ளனர்.

    பஸ் புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே, கண்டக்டர் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம்போட, அவரை கொலை செய்துவிடுவதாக மிரட்டி கொடூரமான முறையில் டிரைவரும், கண்டக்டரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    ஸ்கிரீன் மூடப்பட்ட ஜன்னல்கள்

    பஸ்ஸின் ஜன்னல்கள் முழுமையாக மூடப்பட்டிருந்ததையும், ஸ்கிரீன் போடப்பட்டிருந்ததையும் அந்த மிருகங்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதால், உள்ளே என்ன நடந்தது என்பது வெளியே சென்றவர்களுக்கு தெரியவில்லை. நொய்டா செக்டர்-63 பகுதிக்குச் செல்வதாகக் கூறி ஏற்றிய குற்றவாளிகள், அந்த பகுதியையும் தாண்டி டெல்லி காஷ்மீர் கேட் ஐஎஸ்பிடி அருகிலுள்ள ரிங் ரோடு பகுதி வரை பஸ்ஸை இயக்கியிருக்கிறார்கள்.

    Advertisement

    பாரி சௌக்கிலிருந்து காஷ்மீர் கேட் வரை சுமார் 47 கிலோமீட்டர் தூரம் வரை இந்த அராஜகம் அரங்கேறியுள்ளது. சம்பவத்தின் தடங்களை மறைக்கவோ அல்லது பாதிக்கப்பட்ட சிறுமியை வேறு ஒரு தொலைவான பகுதியில் இறக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்திலோ அந்த பாவிகள் அப்படி செய்திருக்கிறார்கள்.. நள்ளிரவில் காஷ்மீர் கேட் பஸ் டெர்மினஸ் அருகிலுள்ள ரிங் ரோட்டில் சிறுமியை இறக்கிவிட்டு அந்த 2 பேரும் தப்பி சென்றுள்ளனர்.

    பதுங்கியிருந்த குற்றவாளிகள்

    உயிர் பிழைத்த அச்சத்தில் உறைந்த சிறுமி, உடனடியாக காஷ்மீர் கேட் போலீசுக்கு தொடர்புகொண்டு நடந்த கொடுமையை விவரித்து புகார் தந்துள்ளார்.. வடக்கு டெல்லி துணை காவல் ஆணையர் நிகாரிகா பட் இந்தத் தகவல்களை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

    Advertisement

    புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட டெல்லி காவல்துறை, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் சம்பந்தப்பட்ட கண்டக்டர், டிரைவரை தேடினார்கள்.. இறுதியில், திமர்பூரில் உள்ள ஒரு பஸ் ஸ்டாப்பில் டிரைவர் குல்தீப், கண்டக்டர் சந்தீப் 2 பேருமே பதுங்கியிருந்தார்களாம். அங்கே அவர்களை கைது செய்து ஜெயிலில் தள்ளியிருக்கிறர்கள். அத்துடன் குற்ற செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட அந்த ஸ்லீப்பர் பஸ்ஸையும் பறிமுதல் செய்துள்ளனர்..

    கொதிப்பில் 2 மாநிலம்

    தடயவியல் சோதனைகளுக்கு உட்படுத்தி தொடர்ந்து விசாரணையும் நடத்தி கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த சம்பவம் டெல்லி, உத்தரபிரதேசத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுததி வருகிறது.. அம்மாநில அரசுகளின் சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.. அத்துடன் 2 மாநில காவல்துறையினரின் அலட்சியம் குறித்தும் அரசியல் தலைவர்கள் கடுமையான கேள்விகளை எழுப்பி கொண்டிருக்கிறார்கள்..!!

    English Summary

    16 Year Old Girl Boards Sleeper Bus for Help.. Shocking 47 Km Horror in Delhi, What Really Happened?