2024 லோக்சபா தேர்தலிலும் முறைகேடு.. மோடி, அமித்ஷாவிடம் விசாரணை நடத்த வேண்டும்.. ராகுல் காந்தி

  • டெல்லி: தேர்தல் ஆணைய விவகாரம் தொடர்பாக டெல்லியி செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை துரோகி என்று கடுமையாக விமர்சித்தார். மேலும், அவர் பதவி விலக வேண்டும். இந்தியாவில் ஜனநாயகம் அழிக்கப்படுவதை காங்கிரஸ் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என்றும் எச்சரித்தார்.

    Advertisement

    மேலும் 2024 லோக்சபா தேர்தலிலும் முறைகேடு நடந்துள்ளது. முக்கிய தலைவர்கள் தோல்வி அடைகிறார்கள். ஆனால் மோடி, அமித்ஷா மட்டும் ஏன் தோற்கவில்லை எனவும், மோடி, அமித்ஷாவிடம் விசாரணை நடத்த வேண்டும்.. எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    Advertisement

    இந்திய தேர்தல் ஆணையர்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டதாக அம்பலமாகியுள்ளது. SIR குறித்து தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்பட்டதாக, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 10 மாதங்களில் 14 முறை இதற்கான எதிர்ப்பை பதிவு செய்ததாக பரபரப்புத் தகவல் வெளியாகி உள்ளது.

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தேர்தல் ஆணையர்கள் இருவரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது அரசியல் வட்டாரத்திலும் புயலை கிளப்பியுள்ளது. ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:-

    Advertisement

    ஹரியானா சட்டமன்ற தேர்தலில் மோசடி நடைபெற்றது தேர்தல் ஆணையர்களுக்கு தெரிந்தே நடைபெற்றது. தலைமை தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும். முக்கிய தலைவர்கள் தோல்வி அடைகிறார்கள். ஆனால் மோடி, அமித்ஷா மட்டும் ஏன் தோற்கவில்லை. இந்தியாவில் அனைத்து தேர்தல்களிலும் மோசடி நடைபெற்றுள்ளது. எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளிலும் குளறுபடி நடந்துள்ளது.

    தேர்தல் ஆணைய செயல்பாடு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை ஞானேஷ் குமார் மீறியுள்ளார். வாக்கு திருட்டை அம்பலப்படுத்திய அதே காலக்கட்டத்தில்தான் ஆணையர்கள் ஆட்சேபனை கடிதம் எழுதி எழுதினர். மோடி, அமித்ஷாவிடம் விசாரணை நடத்த வேண்டும். ஜனநாயகத்தை அழித்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தை அழிக்க விட மாட்டோம். என ராகுல் காந்தி பேசினார்.

    English Summary

    Rahul Gandhi: Speaking to reporters in Delhi regarding the Election Commission issue, Rahul Gandhi harshly criticized Election Commissioner Gyanesh Kumar, calling him a "traitor." He further demanded that Kumar resign and warned that the Congress would not remain a silent spectator while democracy is being destroyed in India.