டெல்லி: நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 288 இந்தியர்கள் சிக்கி மாயமாகி உள்ளனர். இன்று மதியம் 1 மணி வரை தமிழகத்தை சேர்ந்த 21 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: ''நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 288 இந்தியர்கள் சிக்கி மாயமாகி உள்ளனர். இதில் 73 பேர் திரிசூலி மின்திட்டத்தில் பணியாற்றியவர்கள் ஆவார்கள். குறிப்பாக தமிழகத்தில் இருந்து சென்ற ஒரு குழுவில் 37 பேர், 2வது குழுவில் 49 பேர், மேற்கு வங்க குழுவை சேர்ந்த 32 பேர், கேரளா குழுவை சேர்ந்த 33 பேர், பிற மாநிலங்களை சேர்ந்த 61 பேர் மாயமாகி உள்ளனர். இன்று மதியம் 1 மணி நிலவரப்படி 21 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள்'' என்று கூறியுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த யாரெல்லாம் மீட்கப்பட்டுள்ளனர் என்பது பற்றி இங்கே பார்க்கலாம். 1.சிவரஞ்சணி முத்துநாதன், தற்போது வரை நேபாள வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது. இதனை நேபாளம் போலீசார் உறுதி செய்துள்ளனர். குறிப்பாக சித்வான் பகுதியில் இருந்து மொத்தம் 108 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கிழக்கு நவால்பராசி பகுதியில் இருந்து 62 பேரின் உடல்களும், தாடிங்கில் இருந்து 27 பேரின் உடல்களும், நவால்பராசி பகுதியில் இருந்து 15 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 52 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2.கர்பகம் ராஜமோகன்
3.மாறன் கோவிந்தசாமி
4.சாந்தி மாறன்
5.முத்து குமரேசன் ராமலிங்கம்
6. நவு கபிர்தாஸ்
7.விஜயபுவனேஸ்வரி விஸ்வநாதன்
8.மைதிலி முத்து குமரேஷன்
9. தியாகராஜன் ரத்தினம்
10. கிருபாகரி பாலசுப்பிரமணியம்
11.வல்லிநாயகி சிவக்குமார்
12.சத்தியா ஜெயராமன்
13.திருமாவளவன் கோவிந்தராஜூ
14.கனகசபை நடேசபிள்ளை
15.ராதை கனகபிள்ளை
16.ரத்தினகுமார் குஞ்சிபாதம்
17.பூங்குழலி பொன்னம்பலம்
18.பழனியப்பன் மாணிக்கபெருமாள்
19.கலைமதி பழனியப்பன்
20.ரகுநாத்ன முனிராஜ்
21.கனகசபை நடேசபிள்ளை என தமிழகத்தை சேர்ந்த மொத்தம் 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.