டெல்லி: டெல்லி அரசு மருத்துவமனையில் மேலே சுழன்று கொண்டிருந்த மின்விசிறி திடீரென்று அறுந்து சிகிச்சை பெற்று வந்த நோயாளியின் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அந்த நோயாளி பரிதாபமாக இறந்தார்.
டெல்லியில் குரு தேக் பகதூர் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் 42 வயது நிரம்பிய அக்பர் என்பவர் நேற்று இரவு சிகிச்சைக்கு சென்றார். உயர் ரத்த அழுத்தம், மூளைக்காய்ச்சல் மற்றும் நிமோனியா உள்ளிட்ட பாதிப்புகளால் அக்பர் பாதிக்கப்பட்டு இருந்தார்.
மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். நர்சிங் ஆபிசர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தார். இந்த சமயத்தில் அக்பர் படுத்து கிடந்த படுக்கையின் மேல்புறம் மின்விசிறி சுழன்று கொண்டிருந்தது. படுகாயமடைந்த அக்பர் அலறி துடித்தார். உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். நர்சிங் ஆபிசருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அப்போது திடீரென்று மின்விசிறி அறுந்து கீழே விழுந்தது. இதில் அக்பர் படுகாயமடைந்தார். நர்சிங் ஆபிசர் காயமடைந்தார்.