50 ஓடிடி தளங்களுக்கு இந்தியாவில் தடை.. மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை.. என்ன காரணம்?

  • டெல்லி: நம் நாட்டில் பயன்பாட்டில் இருந்து வந்த 50 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆபாசமான கண்டென்ட் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்டவற்றை மீறியததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறையின் இணையமைச்சர் எல் முருகன் அறிவித்தார்.

    Advertisement

    தற்போது நம் நாட்டில் ஓடிடி தளங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதில் பல ஓடிடி தளங்களில் ஆபாசமான கண்டெண்ட் இருப்பதோடு, நம் நாட்டில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறும் வகையிலும் உள்ளன.

    Advertisement

    இதுதொடர்பாக மத்திய அரசுக்கு புகார்கள் சென்ற நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் விதிமீறிய ஓடிடி தளங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் தான் லோக்சபாவில் எம்பி ராஜபாவ் பராக் பிரகாஷ் வாஜே எழுப்பிய கேள்விக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் எல் முருகன் எழுத்து பூர்வமாக பதிலளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    ''கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் 50 ஓடிடி தளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆபாசமான கண்டெண்ட், தகவல் தொழில்நுட்ப சட்டம், பிஎன்எஸ் சட்டம், பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதை தடை செய்யும் சட்டம் 1986 உள்பட நம் நாட்டின் விதிகளை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஓடிடி தளங்கள் மீது மத்திய அரசுக்கு புகார்கள் வந்த நிலையில் அதனை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.

    English Summary

    The Union Government has banned 50 OTT platforms that were operating in the country. L. Murugan, the Union Minister of State for Information and Broadcasting, announced in Parliament that this action was taken due to violations involving obscene content and the Information Technology Act, among other things.