கரப்பான் பூச்சி ஜனதா நாளை போராட்டம்.. டெல்லியில் 23 ஆயிரம் போலீஸ் குவிப்பு! இன்றே மூடப்படும் மெட்ரோ?

  • டெல்லி: எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ், சிஜேபி போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில் நாளை டெல்லியில் சிஜேபி போராட்டம் நடத்த போவதாக அறிவித்த நிலையில் போலீசார் அனுமதி அளிக்கவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லியில் 23 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.

    Advertisement

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. சக தேர்தல் ஆணையர்களே தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியது வெளிச்சத்துக்கு வந்தது. எஸ்.ஐ.ஆரை வைத்து வாக்குகளை பறிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் இந்த பிரச்சினை எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்தது.

    Advertisement

    சிஜேபி போராட்டம்

    இந்த விவகாரத்தை கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும் கையில் எடுத்துள்ளது. அக்கட்சி கடந்த வாரம் மும்பையில் பிரமாண்டமான போராட்டத்தை நடத்தியது. அதைத்தொடர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நேற்று பெங்களூர் சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்தியது. அக்கட்சியின் தலைவர் ஆப்ஜித் தீப்கே தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் அசுதோஷ் ரங்கா, சவுரவ்தாஸ், பிரபல யூடியூபர் துருவ் ராதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மும்பை, டெல்லியை விடுங்க.. RSS கோட்டையில் வெடித்த போராட்டம்! கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பாஜக!
    Advertisement

    தேர்தல் ஆணையரை மாற்றினால் மட்டும் போதாது, எஸ்.ஐ.ஆரே ரத்து செய்யப்பட வேண்டும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி கூறியது. அக்டோபர் 10 ஆம் தேதி நாளை டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெறும் என்று என்று ஏற்கனவே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்தது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டு வருகின்றன.

    போலீசார் அனுமதி மறுப்பு

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று டெல்லி போலீஸ் கூறி வருகிறது. 10 நாட்களுக்கு முன்பே அனுமதி கோரி கடிதம் தரவேண்டும் என்ற விதி பின்பற்றப்படவில்லை என்பது டெல்லி போலீசாரின் வாதமாக உள்ளது. அதேபோல, கடந்த முறை நடைபெற்ற போராட்டத்தின் போது, விதிகள் மீறப்பட்டதாகவும் இதனால் பொது நலன் கருதி இத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

    Advertisement
    விஸ்வரூபம் எடுக்கும் எஸ்ஐஆர் பிரச்சனை.. ”கருப்பு தினம்” நாடு தழுவிய போராட்டம் நடத்தும் காங்கிரஸ்

    23 ஆயிரம் போலீசார் குவிப்பு

    போராட்டத்திற்கு அதிக இளைஞர்கள் வருவார்கள் என்பதால், பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி போலீசார் எடுத்து வருகிறார்கள். டெல்லியில் 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. ராஜீவ் சவுக், சென்ட்ரல் செக்ரடேரியட், நியூ டெல்லி, படேல் சவுக், ஜன்பத், மண்டி ஹவுஸ், பரகம்பா ரோடு, ஐடிஓ, டெல்லி கேட், கான் மார்க்கெட், லோக் கல்யாண் மார்க், உத்யோக் பவன், காஷ்மீரி கேட், ஹவுஸ் காஸ், ஐஎன்ஏ மற்றும் லஜ்பத் நகர் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் இன்று இரவு 9 மணிக்கு பிறகு மூடப்படும் என்று அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது. அதேபோல, டெல்லியில் 23 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    English Summary

    Delhi metro: The Congress and the CJP are staging protests demanding the resignation of Chief Election Commissioner Gyanesh Kumar over the SIR issue. Meanwhile, the police have denied permission for the CJP's planned protest in Delhi tomorrow. Additionally, 23,000 police personnel have been deployed in Delhi for security reasons, and 57 metro stations in the city have been closed.