இந்தியாவில் 8.7 கோடி இளைஞர்களுக்கு வேலையும் இல்லை.. படிப்பும் இல்லை.. நிதி ஆயோக் அதிர்ச்சி தகவல்

  • டெல்லி: இந்தியாவில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட சுமார் 8.7 கோடி இளைஞர்கள் கல்வி, வேலை அல்லது திறன் பயிற்சி என எதிலும் ஈடுபடாமல் இருப்பதாக நிதி ஆயோக் எச்சரித்துள்ளது. நாட்டின் இளைஞர்களில் கணிசமான பகுதியினர் கல்வியில் இருந்து வேலை கிடைக்காமல் இருக்கிறது. இவர்கள் வேலைவாய்ப்பிற்கு தேவையான திறன்களை பெற முடியாத நிலை இருப்பதையே இந்த நம்பர் காட்டுகிறது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

    Advertisement

    நமது நாட்டில் மத்திய அரசின் புள்ளியல் துறை தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வுகள் குறித்து தகவல்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி தேசிய மாதிரி ஆய்வின் புதிய அறிக்கையில் சில முக்கியமான தகவல்கள் இடம்பெற்று இருக்கிறது. குறிப்பாக கல்வி, வேலைவாய்ப்பு அல்லது அதற்கான பயிற்சியில் ஈடுபடாத இளைஞர்கள் குறித்த சில அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்று இருக்கிறது.

    Advertisement

    8.7 கோடி இளைஞர்கள்

    இதில் எந்தவொரு பயிற்சியிலும் ஈடுபடாத இளைஞர்களை அவர்கள் நீட்- NEET அதாவது Not in Education, Employment or Training என குறிப்பிடப்பட்டுள்ளனர். இதில் வேலைவாய்ப்பு இல்லாதவர்களும் அடங்குவர். இந்தியாவில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட சுமார் 8.7 கோடி இளைஞர்கள் இதுபோல NEET பிரிவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல இருக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு குறைந்த கட்டணத்தில் அல்லது மானியத்துடன் கூடிய திறன் பயிற்சிகளும், நிதி ஆதரவும் வழங்கப்பட வேண்டும் என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.

    வெறும் 8% பேர்

    கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையிலான கனெக்ஷன் பலவீனமாக இருப்பதும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பட்டதாரிகளில் வெறும் 8.25% பேர் மட்டுமே தங்களது கல்வி தகுதிக்கு தொடர்புடைய பணிகளில் வேலை செய்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுபவம் மற்றும் தொழில்துறைக்கு ஏற்ற பயிற்சி இல்லாதது, கல்வி தகுதி பெற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை பாதிப்பதாகவும் அந்த ரிப்போர்ட் கூறுகிறது.

    குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள், கல்லூரி செலவுகள் மற்றும் தனியார் பயிற்சிகளுக்கு அதிகம் செலவிட வேண்டி இருக்கிறது. இதனால் அவர்களால் கூடுதல் திறன் பயிற்சிக்கான கட்டணத்தை செலுத்த முடியாமல் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. பட்டப்படிப்புக்குப் பிறகு சிலர் குறைந்த ஊதியமாக இருந்தாலும் நிலையான வருமானம் வேண்டும் என்பதால் வேலையை தேர்வு சூழலுக்கு தள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இருப்பினும், பல மாணவர்கள் வேலை கிடைக்காமல் மேலே குறிப்பிடப்பட்டுள்ள NEET பிரிவில் சேருகின்றனர்.

    Advertisement

    6ஆம் வகுப்பு முதலே திறன் பயிற்சி?

    இதற்கு தீர்வாக, முறையான கல்விக்கு பிறகு திறன் பயிற்சியை தொடங்குவதற்கு பதிலாக, பள்ளி கல்வியிலேயே அதை ஒருங்கிணைக்க நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. 6 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்க்குத் திறன் பயிற்சிகளை வழங்கவும், 9ஆம் வகுப்பு முதல் தொழில்சார் கல்வி பாதைகளை அறிமுகப்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    உள்ளூர் மற்றும் தேசிய அளவில் அதிக தேவை உள்ள துறைகளுக்கு ஏற்ப இந்த பாடப்பிரிவுகளில் தொழில்சார் பயிற்சி வழங்கப்படும். தற்போது இந்தியாவில் வெகு சில பள்ளிகளில் மட்டுமே தொழில் படிப்புகள் வழங்கப்படுவதாகவும் அந்த நம்பரை அதிகரிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    சிறப்பு படிப்புகள்

    நமது கல்வி அமைப்பு என்பது வழக்கமான பட்டப்படிப்புகளில் இருந்து தொழில்துறைக்கு ஏற்ற சிறப்பு படிப்புகளுக்கு மாற வேண்டும் என நிதி ஆயோக் கூறியுள்ளது. வேலை சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளை அதிகரிக்கவும், படித்து கொண்டே சம்பாதிக்கும் வகையிலான வாய்ப்புகளை உருவாக்கவும் பரிந்துரைத்துள்ளது. குறைந்த கார்பன் எமிஷனை வலியுறுத்தும் கிரீன் தொழில்கள், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் துறைகளில் பயிற்சியை அதிகரிக்க வேண்டும் என்றும் வேலைவாய்ப்பு குறையும் துறைகளில் இருப்பவர்களுக்கு மறுதிறன் பயிற்சி வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    நிதி ஒதுக்கீடு

    2014-15 முதல் 7.67 கோடிக்கும் அதிகமானோர் திறன் பயிற்சி பெற்றுள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. 2025-26 மத்திய பட்ஜெட்டில் பல்வேறு அமைச்சகங்களின் திறன் மேம்பாட்டுச் செலவுகளுக்காக ரூ.34,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமே போதாது என்றும் கல்வி, திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு இடையே வலுவான தொடர்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

    English Summary

    Around 8.7 crore Indians aged 15 to 29 were not in education, employment or training(வேலைவாய்ப்பு குறித்து நிதி ஆயோக் அதிர்ச்சி தகவல்): NITI Aayog Report says very less Indians are in jobs.