அபிஜித் தீப்கே இனி போராட முடியுமா? ஓராண்டு அமைதிக்கு பங்கம் ஏற்படுத்த தடை.. கோர்ட் போட்ட கண்டிஷன்

  • டெல்லி: நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளரான சவ்ரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோரை டெல்லி நிர்வாக மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று விடுவித்து. அவர்களுக்கு முக்கிய கண்டிஷன் போடப்பட்டுள்ளது. அடுத்த ஓராண்டுக்கு அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்படக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர்களால் இனி போராட்டத்தில் பங்கேற்க முடியுமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அதுபற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளர்களாக சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரை நேற்று டெல்லி போலீசார் கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 126 (அமைதியை பேணுவதற்கான நடவடிக்கை), பிரிவு 170 (குற்றங்கள் நிகழ்வதை தடுக்க கைது செய்தல்) உள்ளிட்டவற்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

    Advertisement

    இவர்கள் 3 பேரும் இன்று காலையில் டெல்லி நிர்வாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட் அவர்கள் 3 பேரையும் விடுவிக்க அதிரடியாக உத்தரவிட்டார். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் 3 பேரும் அடுத்த ஓராண்டு வரை அமைதிக்கு பங்கம் விளைவிக்க கூடாது என்பது தான். இந்த கண்டிஷன் அடிப்படையில் தான் 3 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    இப்போது பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஓராண்டு வரை அமைதிக்கு பங்கம் விளைவிக்க கூடாது என்று அபிஜித் தீப்கே, சவ்ரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோருக்கு கண்டிஷன் போடப்பட்டால் அவர்களால் இனி போராட்டத்தில் பங்கேற்க முடியுமா? இல்லையா? என்று பலரும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். இதற்கான விடையை இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    இதற்கு முதலில் எப்படி ஒருவர் இந்த கண்டிஷனில் ரிலீஸ் ஆவார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது ஓராண்டு வரை அமைதியை காப்பேன். அமைதிக்கு குந்தகம் விளைவிக்கமாட்டேன் என எழுதி உத்தரவாதம் அளிக்க வேண்டும். அதன்பிறகு தான் ஒருவர் இந்த கண்டிஷனில் விடுவிக்கப்படுவார். அந்த வகையில் அபிஜித் தீப்கே, சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரும் இந்த கண்டிஷன் தொடர்பான பிணைப்பத்திரத்தில் கையெழுத்திட்டு இருப்பார்கள்.

    இனி அவர்களால் போராட முடியுமா? இல்லையா? என்பது பற்றி பார்ப்போம். பொதுவாக இத்தகைய கண்டிஷனில் ஒருவர் ரிலீஅவரது மொத்த பேராட்ட உரிமையும் பறிக்கப்படாது. அவரால் போராட்டங்களில் பங்கேற்க முடியும். ஆனால் அந்த போராட்டம் என்பது முறையாக போலீசாரிடம் அனுமதி பெற்றதாக இருக்க வேண்டும். அந்த போராட்டத்தால் எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் வராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இப்படியான போராட்டங்களில் தாராளமாக பங்கேற்கலாம்.

    Advertisement

    ஆயுதங்கள் இன்றி அமைதியாக ஒருவர் போராடுவதற்கு அரசியலமைப்பு சட்டமே இடம் அளிக்கிறது. அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a) மற்றும் 19(1)(b) உள்ளிட்டவை இதனை உறுதி செய்கின்றன. அந்த வகையில் அமைதியான போராட்டத்தில் அபிஜித் தீப்கே, சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா பங்கேற்கலாம். இதில் எந்த பிரச்சனையும் இல்லை.

    அதேவேளையில் போலீசார் அனுமதி மறுத்த போராட்டங்களில் பங்கேற்பது அல்லது அனுமதி பெற்ற போராட்டத்தில் பங்கேற்றாலும் திடீரென வன்முறை, பொதுமக்களுக்கு இடையூறு, சாலை மறியல் உள்ளிட்டவற்றை செய்தால் உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி தற்போதைய உத்தரவாத பிணையை மீறுவதாக கருதப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை பாயும்.

    Advertisement

    இது கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே, சவுரவ் தாஸ், அசுதோஷ் சர்மாவிற்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இவர்கள் இனி முன் நின்று நடத்தும் போராட்டங்களில் இவர்கள் மட்டுமின்றி மொத்த போராட்டக்காரர்களும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். கல்வீசுதல், சாலை மறியல், தடையை மீறி போராட்டம், ஊர்வலம் சென்றால் அது அபிஜித் தீப்கே, சவுரவ் தாஸ், அசுதோஷ் சர்மா ஆகியோருக்கு பெரிய பிரச்சனையாக மாறும்.

    இதுவரை போலீசார் அனுமதி மறுத்தாலும் டெல்லியில் பேரணி, போராட்டம் நடத்த முயன்ற அபிஜித் தீப்கே, சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோருக்கு இனி அப்படி செயல்பட முடியாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    English Summary

    The Delhi Executive Magistrate Court today released Abhijit Dipke—founder of the 'Karrappanpoochi Janata Party' (Cockroach Janata Party)—along with co-coordinator Sourav Das and Ashutosh Ranga, who were arrested yesterday. However, a key condition was imposed: they have been ordered not to engage in any activities that disturb the peace for the next year. This has raised questions about whether or not they can participate in protests moving forward; here, we examine the background of the situation.