டெல்லி: டெல்லி போராட்டத்துக்கு சென்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளரான சவ்ரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோரை நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் இன்னும் விடுவிக்கப்படாத நிலையில் இன்று காலை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட உள்ளனர். அதுமட்டுமின்றி அபிஜித் தீப்கே உள்பட 3 பேரையும் விடுவிக்காதது ஏன்? என்பது பற்றி டெல்லி போலீசார் பரபரப்பான விளக்கம் அளித்துள்ளது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளர்களாக சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரை நேற்று டெல்லி போலீசார் கைது செய்தனர். இவர் டெல்லியில் நேற்று அறிவித்த போராட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் மும்பையில் இருந்து விமானத்தில் டெல்லி வந்த உடன் விமானத்திற்குள் நுழைந்தே 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பொதுவாக ஒரு அமைப்பு அல்லது கட்சியினர் அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் அவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு மாலை 6 மணிக்கு மேல் போலீசார் விடுவிப்பார்கள். ஆனால் அபிஜித் தீப்கே உள்பட 3 பேரையும் போலீசார் இன்று காலை வரை விடுவிக்கவில்லை. அதுமட்டுமின்றி அவர்கள் 3 பேரும் எங்கு உள்ளனர்? என்பது பற்றிய விஷயத்தை போலீசார் தெரிவிக்கவில்லை. மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர். இதற்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் தான் இன்று காலையில் புதிய தகவல் வெளியாகி உள்ளது. அபிஜித் தீப்கே உள்பட 3 பேரையும் ஏன் விடவில்லை என்பது பற்றி டெல்லி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி காவல்துறை, ''முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அபிஜித் தீப்கே, சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்காஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று 2வது நாளாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் அறிவித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என விளக்கம் அளித்துள்ளது. அதுமட்டுமின்றி கைதாகி உள்ள அபிஜித் தீப்கே உள்பட 3 பேரும் இன்று காலையில் டெல்லி கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் நிர்வாக மாஜிஸ்திரேட் (Executive Magistrate) முன்பு போலீசார் ஆஜர்ப்படுத்த உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக மாஜிஸ்திரேட் என்பவர் நீதிபதி கிடையாது. அவர் ஒரு அரசு அதிகாரி ஆவார். இவர் குறிப்பிட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கு சட்டம்-ஒழுங்கை பராமரிக்கவும், நிர்வாக ரீதியான முடிவுகளை எடுக்கவும் சட்ட அதிகாரங்கள் உள்ளது. இந்நிலையில் தான் நிர்வாக மாஜிஸ்திரேட் முன்பு அபிஜித் தீப்கே உள்பட 3 பேரும் இன்று ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர். இதனை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சட்டப்பிரிவின் தலைவர் ரத்னா சிங் கூறுகையில், ''அபிஜித் திப்கே உள்பட 3 பேரும் நிர்வாக மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர். இந்த சமயத்தில் போலீஸ் நிலையத்தில் நானும் பிற எங்களின் வழக்கறிஞர்களும் இருப்போம்'' என்றார்.