டெல்லி: போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை பழிவாங்க விரும்பவில்லை என்று பிரதமர் நநேந்திர மோடி கூறியிருந்தார். ஆனால், வெறும் ரீல்ஸ் மட்டும் போட்டு இப்படி சொன்னால் போதாது.. உண்மையாகவே நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்று, பிரதமருக்கு கரப்பான் ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "நண்பரே ரீல்ஸில் மட்டும்தான் மன்னிப்பீர்களா? அல்லது போட்ட வழக்குகளை நிஜமாகவே வாபஸ் வாங்குவீர்களா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
நீட், சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று.. மத்திய கல்வியமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். மத்திய அரசு இந்த போராட்டத்திற்கு பணிந்தது. அமைச்சர் ராஜினாமா செய்தார். ஆனால், மாணவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. குறிப்பாக பீகாரில், அம்மாநில பாஜக அரசு மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யும் பணிகளை தீவிரப்படுத்தியது. மாணவர் போராட்டத்தை வாபஸ் வாங்க மத்திய அரசு வலியுறுத்தியபோது, போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று கரப்பான் ஜனதா கட்சி வலியுறுத்தியிருந்தது. இந்த நிபந்தனைகளின் அடிப்படையில்தான் போராட்டத்தை திரும்ப பெற்றதாக கூறும் இந்த அமைப்பு.. இப்போது மாணவர்கள் மீது வழக்குப்பதிவது எந்த விதத்தில் நியாயம்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறது. முன்னதாக நேற்று மோடி வெளியிட்டிருந்த வீடியோவில், "என்னை விமர்சித்தவர்களை நீதிமன்றத்திற்கு அலையவிடுவது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அவர்களை நான் மன்னிக்க விரும்புகிறேன். இந்த பருவத்தில் தவறுகள் நடப்பது இயல்பதுதான். சில குறும்புக்கார குழந்தைகள் நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கின்றனர். ஆனால், இதே பருவம்தான் தவறுகளை திருத்திக்கொள்வதற்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது. சில சமயங்களில் நமது நாக்கு பற்களுக்கு இடையில் சிக்கி கடிவாங்குகிறது. இதற்காக நாம் பற்களை உடைப்பதில்லை. ஏனெனில் பல்லும் நாக்கும் நம்முடையதுதான். அதேபோல இளைஞர்களும் நம்முடையவர்கள்தான். அவர்களுக்கு சரியான பாதையை காட்டுவது நம்முடைய பணி" என்று கூறியிருந்தார். இந்நிலையில்தான் ரீல்ஸில் மட்டும் மன்னிப்பீர்களா? அல்லது உண்மையாகவே மன்னிப்பீர்களா? என்று கரப்பான் ஜனதா கட்சியின் தலைவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.என்ன பிரச்சனை?
மாணவர்கள் மீது FIR
வீடியோ போட்ட மோடி
மாணவர் தலைவர் கேள்வி