என்னை கைது செய்தாலும் டெல்லி போராட்டத்தை நிறுத்தக் கூடாது” - CJP நிறுவனர் அபிஜித் தீப்கே வீடியோ

  • டெல்லி: "என்னை கைது செய்தாலும் டெல்லியில் நடைபெறும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தை நிறுத்தக் கூடாது" என்று கரப்பான்​பூச்சி ஜனதா கட்​சி​யின் (CJP) நிறு​வனர் அபிஜித் தீப்கே ஒரு வீடியோ வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் (SIR) தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக செயல்பட்டு சில முடிவுகளை எடுத்ததாக காங்கிரஸ், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) உள்பட பல்வேறு கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    Advertisement

    தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று சனிக்கிழமை (அக்டோபர் 10) போராட்டம் நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியும் (சிஜேபி), சிபிஐ (எம்எல்)-ன் மாணவர் அமைப்பான ஏஐஎஸ்ஏ-வும் இணைந்து அழைப்பு விடுத்துள்ளன. இந்த போராட்டத்துக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தப் போராட்டத்துக்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மேலும், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி போராட்டம் நடத்த முயல்பவர்களை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு கருதி டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஜந்தர் மந்தர் பகுதியில் இணைய சேவையும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.

    Advertisement

    இந்நிலையில் சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே வெளியிட்டுள்ள வீடியோவில், "சனிக்கிழமை காலை நான் டெல்லி வருகிறேன். அதன்பிறகு என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியாது. அரசு என் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தையோ (NSA) அல்லது சட்டவிரோதத் தடுப்புச் சட்டத்தையோ (UAPA) பிரயோகிக்கலாம். என்னை கைது செய்வது குறித்து நான் அச்சம் கொள்ளவில்லை.

    நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என நாம் போராடுகிறோம். அது எஸ்ஐஆர் நடவடிக்கையை திரும்ப பெறாமலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகாமலும் ஒருபோதும் நடைபெறாது. நான் கைது செய்யப்பட்டாலும் போராட்டத்தை நிறுத்தக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன்.

    Advertisement

    இது இந்தியாவின் அரசியலமைப்புக்கான போராட்டம். சட்டத்துக்கு உட்பட்ட, பொறுப்புமிக்க, அமைதியை விரும்பும் குடிமக்கள் நாம். இந்த பேரணி அமைதியான முறையில் நடைபெற வேண்டும். மகாத்மா காந்தியின் வழியில் நாம் பயணிக்கிறோம். இந்த போராட்டம் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். அதற்கான பொறுப்பு நம்மிடம் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    CJP Leader Abhijeet Dipke, in a video appeal ahead of the protest at Jantar Mantar over CEC row in Delhi on October 10, said he was unsure whether he would be arrested upon landing in Delhi but asserted that he would not back down from the fight for free and fair elections.