ரயிலில் ஏசி பெட்டியில் டிக்கெட் எடுக்காமல் ஏறிய பலர்.. பொங்கி எழுந்த பயணிகளின் தரமான சம்பவ வீடியோ

  • டெல்லி: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் வடமாநில ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அப்படி நிரம்பியதால், மக்கள் முன்பதிவு செய்த பெட்டிகளிலும் ஏறுகிறார்கள். இன்னும் ஒரு படிமேலே போய், ஏசி பெட்டிகளிலும் ஏறுகிறார்கள். அப்படித்தான் மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் ஏராளமானோர் ஏசி பெட்டிகளிலும் ஏறினார்கள். இதனால் ஏசி பெட்டியில் பயணித்தவர்களுக்கு மூச்சுவிடவே சிரமப்படும் நிலை ஏற்பட்டது. கழிவறைக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் செயினை இழுத்து பிடித்து ரயிலை நிறுத்தினார்கள். அப்போது முன்பதிவு செய்யாத பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

    Advertisement

    இந்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்துள்ள ஒரு நெட்டிசன்," முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள் நிரம்பி வழிகின்றன! பயணிகள் தங்களே தங்களுடைய பிரச்சனையைத் தீர்க்கிறார்கள். பயணிகள் ஏசி 3ம் வகுப்பு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகள், வசதி மற்றும் பாதுகாப்பிற்காகப் பணம் செலுத்தியுள்ளனர். ஆனால் அதற்குப் பதிலாக, அவர்கள் நெரிசல், அனுமதியற்ற பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட இடங்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள். அப்படியான சூழலில் டிக்கெட் பரிசோதகர் எட்டிக்கூட பார்க்கவில்லை. ரயில்வே பாதுகாப்பு படையினரும் எந்த உதவியும் செய்யவில்லை. இதனால் கோபம் அடைந்த பயணிகள் அல்லது பாதுகாப்புப் பணியாளர்களிடமிருந்து எந்தவிதமான உதவியும் கிடைக்காமல் தவித்தனர்!

    Advertisement

    இந்த நிலைமையால் கோபம் அடைந்த மேற்கு வங்கப் பயணிகள் ஒன்றுபட்டு, தங்களுடைய சொந்தப் பெட்டியை மீட்கப் போராடினர். அவர்களே அந்தப் பெட்டியைச் சுத்தம் கூட செய்தனர்!
    இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட பயணத்திற்காகப் பணம் செலுத்துகிறார்கள், ஆனால் தாங்கள் ஏற்கனவே பணம் செலுத்திய அடிப்படை வசதிகளுக்காகப் போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்திய ரயில்வேயில் பயணிகளின் பாதுகாப்பு இப்படித்தான் இருக்குமா? இதற்கு யார் பொறுப்பு? முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள் நெரிசல் மிகுந்த பொதுப் பெட்டிகளாக மாறக்கூடாது. நடவடிக்கை எடுங்கள். பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். பயணிகளை மதியுங்கள். இந்தக் காணொளியைப் பகிருங்கள். இந்தப் பிரச்சனையை யாரும் புறக்கணிக்க முடியாதபடி செய்யுங்கள்" இவ்வாறு ஆவேசமாக கூறியிருந்தார்.

    Advertisement
    4400 கோடி டிரம்பின் கட்சிக்காக செலவு செய்த எலான் மஸ்க்.. தோல்வியால் கையைவிட்டு போன 2.7 லட்சம் கோடி

    இது தொடர்பாக குறிப்பிட்ட வீடியோவை பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ள இன்னொரு நெட்டிசன், "நீண்ட நாட்கள் காத்திருந்து கஷ்டப்பட்டு முன்பதிவு செய்து கான்பார்மான ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுடன் பயணம் செய்த பயணிகள், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்கள் அந்தப் பெட்டியை ஆக்கிரமித்திருந்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, எம்ர்ஜென்சி சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். இந்தச் சம்பவம், ரயில்களில் அதிகப்படியான கூட்ட நெரிசல் மற்றும் பயணிகளின் உரிமைகள் குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. ஏசி டிக்கெட்டுக்காகப் பணம் செலுத்திப் பயணம் செய்யும்போது, அதற்குரிய இருக்கையும் வசதியும் பயணிகளுக்குக் கிடைக்க வேண்டாமா?" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

    Advertisement

    இன்னொரு நெட்டிசன் கூறுகையில், ஏசி டிக்கெட்டுக்காகப் பணம் செலுத்தும் பயணிகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய இருக்கையும் வசதியும் கிடைக்க வேண்டாமா? டிக்கெட் இன்றிப் பயணம் செய்யும் இந்தச் செயலை இன்னும் எவ்வளவு காலம் பொறுத்துக்கொள்ளப் போகிறோம்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    அமெரிக்க பங்குச் சந்தை வரலாற்றையே புரட்டி போட்ட இடைத்தேர்தல் முடிவு.. டிரம்ப் ஆவேசம்

    உண்மையில் இதுபோன்ற பிரச்சனைகளை தடுப்பதற்கு ரயில்வே தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வந்தே பாரத் போன்ற ரயில்கள் எவ்வளவு தேவையோ, அதேபோல் சாமானிய மக்கள் குறைந்த கட்டணத்தில் பயணிக்கக்கூடிய முன்பதிவு இல்லாத ரயில்களை போதிய அளவு ரயில்வே நெரிசல் அதிகம் உள்ள வழித்தடங்களில் இயக்க வேண்டும். சாமானிய மக்களால் முன்பதிவு செய்ய முடியாது உணர்ந்து, ரயில்வே முன்பதிவு இல்லாத ரயில்களை அதிக அளவில் இயக்கி நெரிசலை குறைக்க முன்வர வேண்டும். அதேபோல் ஏசி பெட்டிகள், முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் ஏறுவதை கடுமையாக நடவடிக்கையின் மூலம் எப்போதுமே தடுக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால், எந்த பிரச்சனை எந்த காலத்திலும் தீர்க்க முடியாது என்பதே எதார்த்தமான உண்மை.

    English Summary

    Passengers booked AC 3-Tier tickets, paid for reserved seats, comfort & safety. But instead, they faced overcrowding, unauthorised passengers occupying reserved spaces and ZERO visible assistance from TTEs or security personnel!