ராஜ்யசபா எம்பி பதவி வேண்டாம்.. ராஜினாமா செய்து மம்தா பானர்ஜிக்கு ‘குட்பை' சொன்ன பிரபல நடிகை

  • டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபல நடிகை கோயல் மல்லிக் தனது ராஜ்யசபா எம்பி பதவியை இன்று ராஜினாமா செய்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் அவர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் பதவிக்கு 'குட்பை' கூறியுள்ளார். இது மம்தா பானர்ஜிக்கு அடுத்த அடியாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி. தமிழகத்துடன் சேர்ந்து நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் தோல்வியடைந்து ஆட்சியை பறிகொடுத்தது. மம்தா பானர்ஜியின் தோல்வியை தழுவினார்.

    Advertisement

    இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவுகள் ஏற்பட்டது. 60 எம்எல்ஏக்கள் தனி அணியாகவும், 20 லோக்சபா எம்பிக்கள் தனி அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் மம்தா பானர்ஜியை விட்டு தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தான் தற்போது பெங்காலி மொழி திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வந்த கோயல் மல்லிக் திடீரென்று இன்று தனது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இவர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ராஜ்யசபா எம்பியான நிலையில் உடனடியாக ராஜினாமா செய்துள்ளார்.

    Advertisement

    இதற்கு முன்பு சுகேந்து சேகர் ராய், சுஷ்மிதா தேவ், பிரகாஷ் சிக் பாரைக் உள்ளிட்டவர்கள் தங்களின் ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் ஐக்கியமாகினர். இவர்களை தொடர்ந்து தான் நடிகை கோயல் மல்லிக்கும் ராஜ்யசபா எம்பி பதவியை உதறி உள்ளார். இதனால் இவரும் பாஜகவில் சேரலாம் என்று கூறப்படுகிறது.

    தற்போது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்த கோயல் மல்லிக் நடிகர் ரஞ்சித் மல்லிக்கின் மகள்ஆவார். 40க்கும் அதிகமான பெங்காலி மொழிப்படங்களில் நடித்துள்ளார். மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அவர் மம்தா பானர்ஜியால் ராஜ்யசபா எம்பியானார். இவருடன் பாடகரான பாபுல் சுப்பிரியோ, மேற்கு வங்க மாநில முன்னாள் டிஜிபி ராஜீவ் குமார, மூத்த வழக்கறிஞர்க மேனகா குருசாமி ஆகியோர் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மே மாதம் தான் ராஜ்யசபா எம்பியாக பதவியேற்றனர்.

    Advertisement

    ராஜ்யசபா எம்பியான பிறகு கோயல் மல்லிக், மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்து இருந்தார். ''எனது புதிய பயணம் தொடங்கி உள்ளது. மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு தந்த மம்தா பானர்ஜிக்கு நன்றி'' என்று கூறியிருந்தார். இவரது ராஜினாமா காரணமாக தற்போது ராஜ்யசபாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பலம் 13ல் இருந்து 9 ஆக சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Popular actress Koel Mallick, a member of West Bengal Chief Minister Mamata Banerjee's Trinamool Congress party, resigned from her Rajya Sabha MP post today. She has stepped down just four months after being elected to the Rajya Sabha representing the Trinamool Congress. This is viewed as another setback for Mamata Banerjee.