நார்வே செஸ் சாம்பியனான பிரக்ஞானந்தா.. கைக்கொடுத்து உதவிய அதானியின் ‘கர்வ் ஹாய்' திட்டம்

  • டெல்லி: இந்திய கிராண்ட்மாஸ்டரான 20 வயது நிரம்பிய தமிழகத்தை சேர்ந்த ஆர்.பிரக்ஞானந்தா நார்வே செஸ் தொடரை வெற்றிகரமாக வென்றுள்ளார். இந்த வரலாற்று சிறப்புமிக்க தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் உலக அரங்கில் புதிய சாதனை படைத்துள்ளார்.

    Advertisement

    இந்த நார்வே செஸ் தொடரில் உலகின் பல்வேறு முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். மேக்னஸ் கார்ல்சன் மற்றும் குகேஷ் ஆகிய திறமையான வீரர்களை பிரக்ஞானந்தா நேருக்கு நேர் தோற்கடித்தார். அதேபோல் அலி ரெசா பிரூஜா, வெஸ்லி சோ மற்றும் வின்சென்ட் கீமர் ஆகிய நட்சத்திர வீரர்களையும் இவர் வீழ்த்தினார்.

    Advertisement

    அதானி ஸ்போர்ட்ஸ்லைனின் தடகள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பிரக்ஞானந்தா பயிற்சி பெற்று வரும் நிலையில் இந்த சாதனையை படைத்துள்ளார். அதானி குழுமத்தின் 'கர்வ் ஹாய்' திட்டத்தின் கீழ் இவருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டன. பிரக்ஞானந்தாவின் இந்த அற்புதமான வெற்றி ஒட்டுமொத்த இந்திய விளையாட்டுத் துறைக்கும் பெரும் பெருமையை சேர்த்துள்ளது.

    இந்த நார்வே செஸ் தொடர் செஸ் உலகின் 'விம்பிள்டன்' என்று கூறப்பட்டு வருகிறது. இது உலக அளவில் மிகவும் மதிப்புமிக்க சர்வதேச செஸ் தொடர்களில் ஒன்றாக உள்ளது. இந்தியா சார்பில் ஏராளமானவர்கள் நார்வே செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று இருந்தாலும் கூட யாரும் இதுவரை சாம்பியன் ஆனது இல்லை. பல கிராண்ட்மாஸ்டர்களால் தோல்வியடைந்த நிலையில் பிரக்ஞானந்தா வென்று அச்ததி உள்ளார்.

    Advertisement

    மிகவும் சவாலான இந்த களத்தில் பிரக்ஞானந்தா மிகுந்த மன உறுதியுடனும், தெளிவான திட்டத்துடனும் விளையாடி வாகை சூடியுள்ளார். இந்த தொடரில் பிரக்ஞானந்தா, மேக் கார்ல்சனை 2 முறை வீழ்த்தினார். கிளாசிக்கல் பிரிவில் குகேஷை தோற்கடித்தார். இறுதி சுற்றில் மற்றொரு இந்திய வீரரான அர்ஜுன் எரிகைசியுடன் இவர் 'டிரா' செ்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆர்மாகெடன் டைபிரேக்கர் முறையில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று அசத்தினார். இதன்மூலம் நார்வே செஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை பிரக்ஞானந்தா கைப்பற்றினார். இந்த வெற்றி இந்திய செஸ் வரலாற்றில் மிக முக்கியமான தருணமாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    பிரக்ஞானந்தாவின் வெற்றியை அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி மனதாரா பாராட்டி உள்ளார். இதுபற்றி அவர்,''இந்த வெற்றி உலக செஸ் அரங்கில் சிறப்பானதாக இருக்கும். உலகின் சிறந்த வீரர்களுக்கு எதிராக நுட்பத்துடன் விளையாடி பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். அச்சமற்ற தன்மை, இலக்கில் உறுதி உள்ளிட்டவற்றால் அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது'' என வாழ்த்தி உள்ளார்.

    அதேபோல் அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் பிரணவ் அதானி, ''இந்த வெற்றி என்பது இந்திய விளையாட்டுத் துறைக்கு ஒரு பெருமைக்குரிய தருணமாக உள்ளது. பிரக்ஞானந்தாவின் பயணம் நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற சிறுவர், சிறுமிகள் தங்கள் கனவுகளை நம்பிக்கையுடன் தொடர ஊக்கமளிக்கும்'' என்றார்.

    English Summary

    Indian grandmaster Praggnanandhaa has won the Norway Chess series, defeating several world-class players to claim the title at the age of 20. The victory marks a historic milestone for Indian chess and underlines his growing prominence on the world stage.