கஞ்சா போட்டுவிட்டு.. விமானத்தை ஓட்டிய ஏர் இந்திய விமானி! விசாரணையில் வெளியான ஷாக் தகவல்கள்!

  • டெல்லி: கடந்த மாதம் தாய்லாந்திலிருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று, நடுவானில் திடீரென அது பறந்துக்கொண்டிருந்த உயர்திலிருந்து 300 அடியை குறைத்தது. ஓரிரு வினாடிகளில் இந்த உயரம் குறைப்பு நடந்ததால்.. விமானத்திலிருந்தவர்கள் காயமடைந்தனர். இந்நிலையில் விசாரணையில் விமானி கஞ்சா பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    Advertisement

    விமானம் குறிப்பிட்ட உயரத்தில் பறந்துக்கொண்டிருந்தபோது, திடீரென இந்த உயரத்தை குறைப்பது என்பது மிகவும் ஆபத்தான விஷயமாகும். இது விமானத்தையே இரண்டாக உடைக்கும் ஆபத்து கொண்டது.

    Advertisement

    இந்த விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் (AI2379) பயணித்த பயணிகளில் 24 பேர் காயமடைந்தனர். விமானத்தில் மொத்தம் 3 குழந்தைகள் உட்பட 137 பயணிகள் இருந்தனர். நல்வாய்ப்பாக குழந்தைகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

    இருப்பினும் இந்த விபத்து குறித்து பயணிகள் புகார் எழுப்பியதால், ஏர் இந்தியா நிறுவனம் விசாரணையை தொடங்கியது. விபத்து குறித்து விமான விபத்து விசாரணை வாரியம் நடத்திய விசாரணையில், விமானத்தின் ஆட்டோபைலட் தொழில்நுட்பம் துண்டிக்கப்பட்டது மற்றும் ஹைட்ராலிக் அமைப்புகளில் ஏற்பட்ட கோளறு காரணமாக விமானம் தற்காலிகமாக கட்டுப்பாட்டை இழந்தது என்பது தெரிய வந்தது.

    Advertisement

    இந்த விபத்திற்கு பிறகு இரு விமானிகளுக்கும் கட்டாய போதைப்பொருள் சோதனை நடத்தப்பட்டதில்தான் முதன்மை விமானி போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    பிரான்ஸ் நாட்டின் விமான விபத்து புலானாய்வு முகமை மற்றும் ஏர்பஸ் தொழில்நுட்ப குழுவும் இந்த விசாரணைக்கு உதவியுள்ளன. கஞ்சா பயன்படுத்திய விமானி சுதீப் வசிஷ்டா (34) உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். பாதுகாப்பு விதிமுறைகளில் ஏர் இந்தியா நிறுவனம் கொஞ்சம் கூட காம்பரமைஸ் ஆகாது என்கிற பாலிசியை கொண்டிருப்பதால், இந்த பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

    English Summary

    Air India: Last month, an Air India flight from Thailand to Delhi suddenly dropped 300 feet in mid-air. As this height reduction took place in a couple of seconds.. the people in the plane were injured. In this case, it has been confirmed that the pilot had used ganja during the investigation.