டெல்லி: நீட் கேள்வித்தாள் லீக் விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ள சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தர்மேந்திர பிரதானை நீக்கி பிரதான் மந்திரியை காப்பாற்றிவிட்டீர்கள் என்று சாடினார். நீட் லீக் விவகாரத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டமே மத்திய அரசை தலைகுனிய வைத்ததாகவும் அகிலேஷ் யாகத் கூறினார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து முடங்கி வந்தது. நீட் விவகாரம் தொடர்பாக மாணவர்கள் போராட்டத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை தொடர்ந்து முடங்கியது. இந்தச் சூழலில் தான் இன்று நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் மற்றும் போட்டி தேர்வுகள் வினாத்தாள்களை லீக் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் சட்ட திருத்தம் குறித்த விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தர்மேந்திர பிரதான் ராஜினாமா மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டார். அவர் மேலும், "தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்திற்கு வந்தபோது, அவருக்கு வெளியே வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எவ்வளவு நிம்மதி அடைந்திருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள். ஒரு 'பிரதானை' நீக்கி, 'பிரதான் மந்திரியை' நீங்கள் காப்பாற்றிவிட்டீர்கள்" என்று கிண்டலாக பேசினார். அவர் மேலும், "மாணவர்களின் ஒற்றுமை மற்றும் மன உறுதியால் தான் அரசு இறுதியில் பணிய வேண்டிய நிலை ஏற்பட்டது. தங்களை யாராலும் அசைக்க முடியாது என்று நினைத்த அரசை, இளைஞர்கள் தலைகுனிய வைத்துள்ளனர். இளைஞர்கள் போராட்டம் கொடுத்த அழுத்தத்தால் அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் உருவானது. இந்த மாணவர் போராட்டம் நாட்டில் பெற்றோர்களின் முழு ஆதரவை பெற்ற முதல் பெரிய மாணவர் இயக்கம். அரசு பயப்படும் போதும், பதற்றமடையும் போதும்தான் மக்களின் கோரிக்கைகளை ஏற்று கொள்கிறது. விவசாயிகள் போராட்டத்திலும் இதையே பார்த்தோம். தேர்தல் நெருங்கிய போதுதான் மூன்று வேளாண் சட்டங்களையும் அரசு திரும்பப் பெற்றது. அதேபோல் மாணவர்களின் போராட்டமும் அரசை பின்வாங்க வைத்துள்ளது. தொடக்கத்தில் ஜோக்காக தோன்றிய ஒரு இயக்கம், பின்னர் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இளைஞர்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும். நகைச்சுவையாக தொடங்கிய ஒரு கட்சி கூட மிக பெரிய சக்தியாக மாற முடியும் என்பதை அரசு உணர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கல்வி, தேர்வு முறை மற்றும் பல்கலைக்கழகங்களை ஒரே சித்தாந்தத்தின் கீழ் கொண்டு வர முயன்று வருகிறது. இதுவே மாணவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து கல்வி அமைப்பு, தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழகங்களை சீரழிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இது மாணவர்களுக்கு கடும் கோபத்தை உருவாக்கியது. அதனால் தான் உலகின் மிக பெரிய கட்சி என்று கூறிக்கொள்ளும் பாஜக கூட இறுதியில் பணிய வேண்டிய நிலைக்கு வந்தது" என்று அவர் வலியுறுத்தினார்" என்றார். நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை மூலம் தேர்வுகளை அவுட்சோர்ஸ் செய்ததைப் போல, நாளை முழு அரசையே கூட அவுட்சோர்ஸ் செய்து விடுவார்களோ என்ற அச்சம் எதிர்க்கட்சிகளுக்கே உள்ளதாகவும் அகிலேஷ் யாதவ் சாடினார்.பிரதமரை காப்பாற்றிவிட்டீர்கள்
இறங்கி வந்த அரசு
கரப்பான் பூச்சி கட்சி
பாஜக மீது கோபம்