டெல்லி: ராகுல் காந்தி பொய் கூறி மக்களின் நம்பிக்கையை பெற முடியாது. ராகுல் காந்தி சுய பரிசோதானை செய்து கொள்வது அவசியம். தேர்தலில் தோல்வி அடையும் போதெல்லாம் தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் குறை கூறுகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
மேலும் கூறிய அமித்ஷா, "இனி உங்கள் தந்திரங்கள் மக்களிடம் எடுபடாது. நாட்டு மக்கள் நரேந்திர மோடியுடன் உள்ளனர். இந்த உண்மையை நீங்கள் மறுக்க முடியாது. இட்டுகட்டிய ஊடக நிகழ்ச்சிகள், மாணவர்கள் குரல் ஆகிய நிகழ்ச்சிகளால் நாட்டு மக்களின் நம்பிக்கையை உங்களால் பெற முடியாது" என தொடர்ந்து எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் கட்சிக்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ளார்.
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் டெல்லியில் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதல் முறையாக இந்த போராட்டம் தொடர்பாக பேசியுள்ளார். ராகுல் காந்தியை கடுமையாக அமித்ஷா விமர்சித்துள்ளார். அமித்ஷா கூறியிருப்பதாவது:- ராகுல் காந்தி பொய் கூறி மக்களின் நம்பிக்கையை பெற முடியாது. ராகுல் காந்தி சுய பரிசோதானை செய்து கொள்வது அவசியம். இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. தேர்தலில் தோல்வி அடையும் போதெல்லாம் தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் குறை கூறுகிறது. குஜராத் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைவதற்கு எஸ்.ஐ.ஆர்தான் காரணமா? ராகுல் காந்தியும் அவரது கூட்டாளிகளுக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் வரும் 2029 தேர்தலிலும் அவர்கள் படுதோல்வியை சந்திக்க போகிறார்கள். 2029 பொதுத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரும் பெரும்பான்மையை எட்டப்போகிறது. எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் ஊடுருவியவர்களைக் காப்பாற்றும் உங்களது உத்தியை இந்த நாட்டு மக்கள் முழுமையாகப் புரிந்துகொண்டுவிட்டார்கள். இனி உங்கள் தந்திரங்கள் மக்களிடம் எடுபடாது. நாட்டு மக்கள் நரேந்திர மோடியுடன் உள்ளனர். இந்த உண்மையை நீங்கள் மறுக்க முடியாது. இட்டுகட்டிய ஊடக நிகழ்ச்சிகள், மாணவர்கள் குரல் ஆகிய நிகழ்ச்சிகளால் நாட்டு மக்களின் நம்பிக்கையை உங்களால் பெற முடியாது. ஒன்றரை கிலோமீட்டர் சுற்றளவுக்குள் 14 கட்சிகளின் தொண்டர்களைத் திரட்டி, 8 ஆயிரம் பேர் கொண்ட கூட்டத்தைக் கூட்டிவிட்டால் மட்டுமே உங்களால் இந்த நாட்டின் குரலாக மாறிவிட முடியாது. நாட்டின் குரல் என்பது வயல்வெளிகளிலும், கிராமங்களிலும், தொலைதூர மலைப்பகுதிகளிலும், காடுகளிலும், ஆற்றங்கரைகளிலும் ஒலிக்கிறது என்பதையும், அந்தப் பகுதிகளுக்கு உங்களால் சென்றடைய முடியவில்லை என்பதையும் காங்கிரஸ் கட்சி உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பீகார், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு போன்ற பல மாநிலங்களில் நீங்கள் நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்துள்ளனர். இன்றும்கூட காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மேற்கொண்டு வரும் எதிர்மறை அரசியல் அவர்களுக்கு எந்தப் பலனையும் அளிக்காது. மக்கள் மனநிலையைப் புரிந்துகொண்டு, மக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை அவர்கள் உணர வேண்டும்" என்றார்.2029 தேர்தலிலும் நாங்க தான்
#ஆந்திரரெட்டிகேங்..பாஜகவிடம் பல ஆயிரம் கோடி பெற்ற விஜய்? புட்டு புட்டு வைத்த மாஜி சபாநாயகர் அப்பாவு
உங்க தந்திரம் மக்களிடம் எடுபடாது
மக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்
டிகே சிவக்குமாரை இழுத்து தள்ளிவிட்ட ராகுல் காந்தி! பொது வெளியில் அவமதிப்பதா? வரிந்து கட்டும் பாஜக முதல்வர்