டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.. அதிகாலையிலேயே குலுங்கிய பூமியால் மக்கள் அச்சம்

  • டெல்லி: டெல்லியில் இன்று அதிகாலை திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு டெல்லி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலஅதிர்வால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

    Advertisement

    நம் நாட்டில் ஆங்காங்கே அவ்வப்போது லேசானது முதல் மிதமானது வரை நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று காலையில் தலைநகர் டெல்லியில் பூமி குலுங்கியது.

    Advertisement

    அதிகாலையில் பொதுமக்கள் வீடுகளில் தூங்கி கொண்டிருந்த சமயத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் அதிர்ச்சியடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்துள்ளனர்.

    இந்த நிலநடுக்கத்தை தேசிய நிலஅதிர்வு மையம் உள்ளது. இதுபற்றி அந்த மையம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார். ''வடக்கு டெல்லியில் இன்று அதிகாலை 4 மணி 14 நிமிடம் ஒரு வினாடியில் நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 8 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது'' என்று கூறப்பட்டுள்ளது. இது லேசான நிலநடுக்கம் தான். இந்த நிலநடுக்கத்தில் அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Advertisement

    இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஆங்காங்கே அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. நிலநடுக்கங்கள் பூமிக்கடியில் 0 - 700 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகும். இந்த நிலநடுக்கங்கள் மொத்தம் 3 வகைகளாக பிரிக்கப்படும். மேற்பரப்பு நிலநடுக்கம் (Shallow), இடைப்பட்ட நிலநடுக்கம் (Intermediate), ஆழமான நிலநடுக்கம் (Deep) என்று பிரித்து அறியப்படுகிறது.

    இதில் மேற்பரப்பு நிலநடுக்கங்கள் தான் மிகவும் ஆபத்தானவை. இந்த நிலநக்கங்கள் பூமியில் இருந்து நிலப்பரப்பை அடைய சில வினாடிகள் மட்டுமே எடுத்து கொள்ளும். இதனால் இந்த நிலநடுக்கங்களின்போது அதிர்வு அதிகமாக இருக்கும். இத்தகைய நிலநடுக்கங்கள் ஆபத்தானவையாக இருக்கும்.

    English Summary

    Delhi Earthquake: An earthquake struck Delhi suddenly early this morning. Residents were panicked by the tremors felt in the North Delhi district.