எமர்ஜென்சியைவிட மோசம்.. சர்வாதிகாரியாகவே மாறிவிட்டார் மோடி! பாய்ந்து வந்த கெஜ்ரிவால்! கடும் தாக்கு

  • டெல்லி: இந்தியாவில் தற்போது நிலவும் சூழல், எமர்ஜென்சியில் இருந்ததைவிட மோசமாக இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகார ஆட்சி நடத்துவதாக விமர்சித்துள்ளார். டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பல நூறு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கெஜ்ரிவால் இப்படி கடுமையாக சாடியுள்ளார்.

    Advertisement

    தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சி இன்று போராட்டத்தை அறிவித்திருந்தது. டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும், போராட்டத்திற்கு தாங்கள் அனுமதி அளிக்கவில்லை என்ற டெல்லி போலீஸ், கரப்பான் பூச்சி கட்சி நிர்வாகிகளை அதிரடியாக கைது செய்தனர்.

    Advertisement

    பரபரக்கும் டெல்லி

    பிரபல யூடியூபரும் சமூக செயல்பாட்டாளருமான துருவ் ராட்டி அவரது வீட்டில் வைத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். போராட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றவர்கள் என பலர் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. , டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டதுடன், டிரோன் மூலமாக கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் வாகனங்களைத் தடுக்கும் ஸ்பைக்குகளும் வைக்கப்பட்டுள்ளன.

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, கரப்பான் பூச்சி கட்சி சார்பில் 'ஜந்தர் மந்தர் 2.0' என்ற பெயரில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகவும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் தவறுகள் இருப்பதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

    Advertisement
    "நாட்டையே இழுத்து மூடிவிடுங்கள்.." கொந்தளிக்கும் கரப்பான் பூச்சி கட்சி.. மத்திய அரசு மீது பாய்ச்சல்

    மோடி சர்வாதிகாரம்

    இதற்கிடையே கரப்பான் பூச்சி கட்சிக்கு ஆதரவாகவும் பாஜகவை கடுமையாக விமர்சித்தும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் இப்போது எமர்ஜென்சியை விட மோசமான சூழல் நிலவுவதாக குறிப்பிட்ட அவர், மோடி தலைமையில் நாடு முழுமையான சர்வாதிகாரத்தின் கீழ் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

    எமர்ஜென்சி

    இது தொடர்பாக அவர் மேலும், "இது எமர்ஜென்சி நிலையை விட மோசமானது.. நாம் மோடியின் முழுமையான சர்வாதிகார ஆட்சியின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை இப்போது அதிகாரப்பூர்வமாகவே சொல்லலாம். விமானத்திலிருந்து இறங்கிய உடனேயே 'கரப்பான் பூச்சிகளை' (எதிர்ப்பாளர்களை) கைது செய்வது, முன்னெப்போதும் இல்லாத அளவிலான அச்சத்தையே காட்டுகிறது.

    Advertisement

    தேர்தல் முறைகேடு (வாக்குத் திருட்டு) மூலமாகவே தான் வெற்றி பெற்றோம் என்பது பிரதமர் மோடிக்கு தெளிவாகத் தெரியும்.. இப்போது ஜனநாயகத்தை முற்றிலுமாக நசுக்குவதன் மூலம் அந்த மோசடியை பாதுகாப்பதில் அவர் தீவிரமாக உள்ளார். ஞானேஷ் பதவி விலக வேண்டும். அவரோடு சேர்ந்து மோடியும் பதவி விலக வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

    தரையிறங்கிய அடுத்த நொடி.. விமானத்தில் ஏறிய போலீஸ்.. கரப்பான் பூச்சி தலைவர்கள் திடீர் கைது! வீடியோ

    விமான நிலையத்தில் கைது

    கரப்பான் பூச்சி கட்சியின் நிர்வாகிகள் அபிஜித் தீப்கே, சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் மும்பையிலிருந்து டெல்லி வந்தபோது விமானத்தில் ஏறிய போலீசார் அவர்களை கைது செய்தனர். போராட்டம் நடைபெறும் இடத்துக்கு செல்லவிடாமல் தடுப்பதற்காக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் டிடெண்டாகி வருகிறது.

    Advertisement

    டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், போலீசார் அபிஜித் தீப்கே இருந்த விமானத்துக்குள் நுழைந்தனர். அப்போது போலீசாரிடம் பேசிய தீப்கே, "நான் கைது செய்யப்படுவதற்காகவே இங்கு வந்துள்ளேன்; என்னை கைது செய்யுங்கள்" என்று கூறினார். அதற்கு போலீசார், "இல்லை, இது கைது நடவடிக்கை அல்ல. தயவுசெய்து ஒத்துழையுங்கள்" என்று சொல்லி தடுப்பு காவலில் அவரை அழைத்து சென்றனர்.

    English Summary

    Aam Aadmi Party leader Arvind Kejriwal has accused Prime Minister Narendra Modi of running a dictatorial government(மோடியை கடுமையாக சாடிய கெஜ்ரிவால்): Arvind Kejriwal attacks Modi latest in tamil.