மத்திய அரசுக்கு அடுத்த தலைவலி.. E20 விஷயத்தில் கெஜ்ரிவால் போர்க்கொடி! போராட்டக்களமாகும் டெல்லி

  • டெல்லி: இப்போதுதான் கரப்பான் ஜனதா கட்சியின் போராட்டம் டெல்லியில் ஓயந்திருக்கிறது. இந்நிலையில் E20 பெட்ரோல் விவகாரம் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மத்திய அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார். இதனால் டெல்லியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

    Advertisement

    ஈரான் போர் காரணமாக, பெட்ரேலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எனவே நிலைமையை சமாளிக்க, பெட்ரோலில் 20 சதவிகிதம் வரை எத்தனால் கலந்து, E20 பெட்ரோலாக விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. முடிவெல்லாம் ஓகேதான்.. ஆனால், E20 பெட்ரோல் அடிச்சா.. மைலேஜ் காலியாகுமே என்று வாகன ஓட்டிகள் கொந்தளித்துள்ளனர்.

    Advertisement

    நீட் பேப்பர் லீக்குக்கு எதிராக, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்று ஒரு அமைப்பை இளைஞர்கள் தொடங்கியது போல.. E20 ஜனதா கட்சி என்று புதிய அமைப்பை இளைஞர்களின் மற்றொரு குழு தொடங்கியுள்ளதால் மத்திய அரசு மண்டை காய்ந்திருக்கிறது. இந்த நேரம் பார்த்து, மத்திய அரசுக்கு எதிராக பிரச்சாரத்தை நாளை டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் கெஜ்ரிவால் தொடங்குகிறார். 'E20க்கு எதிரான தேசிய டவுன் ஹால் என்கிற பெயரில் இந்த பிரச்சாரம் நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் நிபுணர்கள், வாகன உரிமையாளர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. எத்தனால் கலந்த பெட்ரோல் அடித்து வாகனம் ஓட்டினால் 2-6 சதவிகதம் வரை மைலேஜ் அடிவாங்கும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். என்னதான் மைலேஜ் அடிவாங்கும் என்றாலும் கூட, இந்த பெட்ரோலை பயன்படுத்தினால் கார்பன் உமிழ்வு குறைவாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

    Advertisement

    மத்திய அமைச்சரின் சமாதானத்தையும், விளக்கத்தயும் மக்கள் ஏற்க ரெடியாக இல்லை. லட்ச ரூபாய் கொடுத்து வண்டி வாங்கினால், மைலேஜ் குறையும் என்று மத்திய அரசு கூறுவது வாகன உரிமையாளர்களை டென்ஷன் ஆக்கியிருக்கிறது.

    இந்த அதிருப்தியை கரப்பான் ஜனதா கட்சியை போல சரியாக பயன்படுத்திக்கொள்ள கெஜ்ரிவால் முயற்சிக்கிறார். ஏற்கெனவே 'டீம் பாரத்' என்கிற அமைப்பு இதற்கான போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறது. இந்த போராட்டக்குழுவினருடன் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். போராட்டக்காரர்களின் கோாரிக்கைகளை பரிசீலிக்க கூடுதல் அவகாசத்தை கேட்டிருக்கிறார். இப்படி இருக்கையில், தற்போது கெஜ்ரிவால் புதிய ஆட்டத்தை தொடங்கியிருப்பது மத்திய அரசை டென்ஷன் ஆக்கியிருக்கிறது.

    Advertisement

    இது போதாது என.. சமூக ஆர்வலர் தெஹ்சீன் பூனாவாலா என்பவர் E20 விவகாரத்திற்கு மத்திய அரசு உரிய தீர்வு காண வேண்டும் என்று கேட்டு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

    English Summary

    Arvind Kejriwal: The agitation by the Bharatiya Janata Party in Delhi has only just subsided. Amidst this, Aam Aadmi Party leader Arvind Kejriwal is set to launch a campaign against the Central Government tomorrow regarding the E20 petrol issue. This has once again stirred up a commotion in Delhi.