மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!

  • டெல்லி: விஜய் முதலமைச்சரானதும் அவருக்கு வந்த முதல் நெருக்கடியே ஜோசியரால்தான். இப்படி இருக்கையில் இன்று பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனான சந்திப்பின் போதும் விஜய் தன்னுடன் ஜோசியர் ரிக்கி பண்டிட்டை அழைத்து சென்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    சினிமா நட்சத்திரமாக இருந்து, திரைத்துறையில் உச்சம் தொட்ட விஜய், அரசியலில் அடி எடுத்து வைத்த உடனே அவருக்கு கை கொடுத்து மக்கள் வெற்றியை தந்திருந்தனர். தேர்தலில் தனித்து பெரும்பான்மை பெற முடியவில்லை என்றாலும், கூட்டணி கட்சிகளின் உதவியுடன் விஜய் முதலமைச்சராக பதவியேற்றிருந்தார்.

    Advertisement

    60 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த திராவிட கட்சிகள் அதிர்ச்சியடையும் அளவுக்கு விஜய்யின் வெற்றி இருந்தது. எம்ஜிஆர் முதல் தேர்தலில் பெற்ற வாக்குகளை விடவும் அதிகமான சதவிகிதத்தில் விஜய் வாக்குகளை பெற்றிருந்தார். இப்படி இருக்கையில், அவர் முதலமைச்சரானதும் அவர் மீது வந்த முதல் பெரிய விமர்சனம், அவருடைய ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி பண்டித்துக்கு அரசு பணி கொடுத்ததுதான். ஒரு ஜோதிடருக்கு அரசு பதவி ஏன் கொடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர்.

    சட்டமன்றம் தொடங்கிய முதல் நாளில், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த பிரேமலாதா விஜயகாந்த், "ஜோதிடரை அரசு பதவியில் அமர வைத்ததன் மூலம் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். இப்படியாக கடும் எதிர்ப்பு கிளம்பியதால், ரிக்கி பண்டித்துக்கு வழங்கப்பட்ட அரசு பணி வாபஸ் பெறப்பட்டது.

    Advertisement

    இந்நிலையில், இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை விஜய் சந்தித்திருந்தார். இதனை தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின்பொழுது ஜோதிடர் ரிக்கி பண்டிட்டும் முதல்வர் விஜய் உடன் சென்று இருக்கிறார்.

    விஜய் பிரதமர் அலுவலகத்திற்கு சென்ற பொழுதும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகத்திற்கு சென்ற பொழுதும் அவரது வாகனத்திலேயே ஜோதிடர் ரிக்கி பண்டிட், முதல்வர் விஜயின் நண்பர் ஜெகதீசன் உடன் இருந்துள்ளனர். அதேபோல விஜயின் தனிப்பட்ட பாதுகாவலர் நயம் மூஷா, அவரது தனிப்பட்ட ஓட்டுநர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

    தனிப்பட்ட பாதுகாவலர்கள் எல்லாம் ஓகேதான். ஆனால் ஏன், ஜோதிடர் இந்த சந்திப்பில் இடம் பெற்றிருக்கிறார் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    English Summary

    The very first crisis Vijay faced upon becoming Chief Minister was triggered by an astrologer. Against this backdrop, the fact that Vijay took astrologer Ricky Pandit along with him during his meeting today with Prime Minister Modi and Finance Minister Nirmala Sitharaman has sparked a controversy.