தடுப்புகள் இல்லாத டோல்கேட்களில் டிமிக்கி கொடுக்கும் வாகன ஓட்டிகள்! நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஷாக்

  • டெல்லி: டெல்லியில் தொடங்கப்பட்ட முதல் பேரியர் இல்லா டோல் பிளாசாவில் டோல் கட்டணத்தை தவிர்க்க வாகன ஓட்டிகள் பல்வேறு மோசடி முறைகளை பயன்படுத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம்பர் பிளேட்களை மாற்றுதல், மறைத்தல், பாஸ்டேக் பொருத்தாமல் பயணம் செய்தல் உள்ளிட்ட செயல்கள் ஏஐ கேமரா அடிப்படையிலான டோல் வசூல் முறைக்கு சவாலாக மாறியுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சமீபத்தில் தடுப்புகள் இல்லாத சுங்கச்சாவடியை டெல்லியில் அமல்படுத்தியது. நாட்டிலேயே இரண்டாவது சுங்கச்சாவடியாகவும், டெல்லியின் முதல் தடுப்புகள் இல்லாத சுங்கசாவடியாகவும் அமைந்தது. முண்ட்கா - பக்கர்வாலா சாலையில் இந்த தடுப்புகள் இல்லாத சுங்கச்சாவடி அமைந்துள்ளது.

    Advertisement

    இந்த சுங்கச்சாவடியை கடக்கும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் அதிநவீன ஏஐ கேமரா மற்றும் சென்சார் கருவிகள் வாயிலாக வாகனங்களை அடையாளம் கண்டு ஆட்டோமெட்டிக்காக கட்டணம் பிடிக்கப்படும். வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நின்று செல்ல தேவையில்லை. இதனால் வாகன ஓட்டிகளின் நேரம் மிச்சமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த சுங்கச்சாவடிகளில் வகன ஓட்டிகள் கட்டணம் பிடித்தம் செய்வதில் இருந்து தப்பிக்க சில நூதன வழிகளை கையாள்வது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

    ஏஐ வசதி கேமரா

    தடையற்ற சுங்கச்சாவடிகளில் அதிநவீன RFID ரீடர்கள் மற்றும் தானியங்கி வாகன எண் பலகை அடையாளம் காணும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மேல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) வசதி கொண்ட கேமராக்கள் மூலம் வாகனங்களை எளிதாக அடையாளம் காணப்படும்.

    Advertisement

    வாகனத்தின் எண் பலகையும் RFID தகவலும் பதிவானதும், அந்த வாகனத்துடன் இணைக்கப்பட்டுள்ள பாஸ்ட்டேக் கணக்கிலிருந்து சுங்க கட்டணம் தானாகவே கழிக்கப்படும். இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்து, வாகனங்கள் தடையின்றி செல்லும் வசதி ஏற்பட்டு, பயண நேரமும் குறைக்கப்படுவதே முக்கிய நோக்கமாகும்.

    மோசடி எப்படி நடக்கிறது?

    சுங்க கட்டணத்தை தவிர்க்க சில வாகன ஓட்டிகள் வேறு முறைகளை பயன்படுத்தி வருகின்றனர். தடையற்ற Multi-Lane Free Flow (MLFF) சுங்க வசதி, வாகன எண் பலகைகளை துல்லியமாக அடையாளம் காண்பதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதனை ஏமாற்றுவதற்காக சில பயணிகள் உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் (HSRP)களை செயற்கையாக சில மாற்றங்கள் செய்து வருகின்றனர்.

    Advertisement

    குறிப்பாக எண் பலகையை மறைக்கும் வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்டுதல், எழுத்துகள் தெளிவாக தெரியாதபடி மாற்றுதல் அல்லது விதிமுறைக்கு புறம்பான எண் பலகைகளை பயன்படுத்துதல் போன்ற செயல்களை வாகன ஓட்டிகள் செய்கிறார்களாம். இவ்வாறு எண் பலகைகள் தெளிவாக இல்லாதது அல்லது தரநிலைக்கு உட்படாத நம்பர் பிளேட் பயன்படுத்தப்படும் போது, அந்த வாகன எண்ணை சுங்கச்சாவடியில் உள்ள நவீன கேமராக்கள் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

    சில வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் பாஸ்ட் டேக் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் இருப்பதால் சுங்க கட்டணத்தை வசூலிப்பது சாத்தியமில்லாத நிலை உருவாகிறது. இருப்பினும், இவ்வாறான வாகனங்களின் எண்ணிக்கை 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், விதிமுறை மீறல்களை தடுக்கவும், சுங்க வசூல் முறையில் உள்ள குறைபாடுகளை சரிசெய்யவும் நடவடிக்கைகள் அவசியம் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

    Advertisement

    வாகன ஓட்டிகள் செய்யும் மோசடிகள்:

    சில வாகன உரிமையாளர்கள் தானியங்கி எண் பலகை அடையாளம் காணும் அமைப்பை குழப்புவதற்காக சட்டவிரோத முறைகளை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, சிலர் வாகனம் இயக்கும் போது எண் பலகையை திருப்பிவிடும் கருவிகளை அது பிளிப் செய்து மாற்றக்கூடிய வகையில், நம்பர் பிளேட்களை பயன்படுத்துகின்றனர். மேலும், எண்கள் மற்றும் எழுத்துகளின் வடிவமைப்பில் சிறிய மாற்றங்களை செய்து, கேமராக்கள் தவறாக பதிவுசெய்யும் வகையில் மாற்றுகிறார்கள்.

    அது மட்டுமின்றி அதிக பிரதிபலிப்பு தன்மை கொண்ட ஸ்டிக்கர்களை நம்பர் பிளேட்டில் ஒட்டுவதன் மூலம், கேமராக்கள் பதிவு செய்யும் போது எண் தெரியாதபடி மங்கலாக அல்லது சிதைந்ததாக தோன்றும் வகையில் மாற்றம் ஏற்படுத்தப்படுகிறார்களாம். வாகன ஓட்டிகளின் இத்தகைய செயல்கள் சுங்க கட்டண வசூல் மற்றும் கண்காணிப்பு முறையை பாதிப்பதாக உள்ளது.

    English Summary

    Toll Plaza: The AI-powered system, introduced by NHAI, uses RFID readers and automatic number plate recognition for seamless toll collection. However, authorities have flagged loopholes, including obscured registration plates, reflective films, and fake number formatting used to confuse cameras and dodge toll fees.