சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்!

  • டெல்லி: கல்வி துறையில் ஏற்பட்டிருக்கும் முறைகேடுகளை சரி செய்யவும், அதேபோல மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது. மட்டுமல்லாது தர்தேந்திர பிரதானுக்கு பதில், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் அமைச்சராக பதவியேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

    Advertisement

    நீட் (NEET-UG) வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித்துறையின் தொடர் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இப்போராட்டம் நடைபெறுகிறது.

    Advertisement

    இந்த போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். குறிப்பாக இடதுசாரி மாணவர் அமைப்பான அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF), இந்திய மாணவர் சங்கம் (SFI) ஆகிய அமைப்புகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருக்கின்றன. குறிப்பாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்.

    இந்நிலையில், தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவருக்கு பதிலாக சோனம் வாங்சுக் கல்வியமைச்சராக பதவியேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

    மாணவர்கள் என்ன சொல்கின்றனர்?

    போராட்டத்தில் பங்கேற்ற நொய்டாவைச் சேர்ந்த ஆரவ் என்ற மாணவர் தி லல்லன்தோப் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தங்களுக்கு இந்து-முஸ்லிம் போன்ற மதவாத அரசியல் முக்கியமல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    நீட், யுபிஎஸ்சி போன்ற முக்கியத் தேர்வுகளின் வினாத்தாள்கள் தொடர்ந்து கசிந்து வருவதால், தங்களுக்குக் கல்வி, சுகாதாரம் மற்றும் அரசின் பொறுப்புக்கூறல் மட்டுமே முக்கியம் என்றும், அதைச் செய்யும் எந்தவொரு தரப்பையும் ஆதரிக்கத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    அபிஜீத் திப்கே கேள்வி

    அதேபோல போராட்டத்தை முன்னெடுத்து வரும் அபிஜீத் திப்கே உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுகையில், தான் இந்த அரசிற்கு எதிராகக் குரல் எழுப்புவதால் தனது தாய் மிகவும் பயந்துபோய் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

    "இந்த நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராகக் குரல் எழுப்பும் ஒவ்வொரு பிள்ளையின் தாயும் இந்த அச்சத்தை உணர்கிறார்கள். நாம் இன்னும் எவ்வளவு காலம் இந்த அரசாங்கத்திற்குப் பயந்து வாழப் போகிறோம்?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    English Summary

    The Cockroach Janta Party has demanded that the irregularities in the education sector be rectified and that Union Education Minister Dharmendra Pradhan resign from his post.