டெல்லி: நமது எதிர்கால பாதுகாப்புக்காக மத்திய அரசால் நடத்தப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) தற்போது இன்னும் எளிமையாகவும், பொதுமக்களுக்கு அதிக லாபம் தரும் வகையிலும் மாறப் போகிறது. ஓய்வு பெற்ற பிறகு, தங்களின் மொத்தப் பணத்தையும் ஒரேடியாக எடுக்காமல், தேவைக்கேற்ப மாதாமாதம் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் பிரித்து எடுப்பதற்கான புதிய வசதியை ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம் (PFRDA) கடந்த மே 15, 2026 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு 'ரிட்டையர்மென்ட் இன்கம் ஸ்கீம்' (Retirement Income Schemes - RIS) என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு சாதாரண பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இந்த புதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள் இதோ:
பொதுவாக, ஒரு நபர் 60 வயதில் ஓய்வு பெறும்போது, NPS திட்டத்தில் சேர்ந்த பணத்தில் 40% தொகையை கட்டாயம் 'அன்யூட்டி' (Annuity) எனப்படும் ஆயுள் கால ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள 60% தொகையை மொத்தமாக கையில் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், புதிய விதியின்படி, அந்த 60% தொகையையும் ஒரேடியாக வாங்காமல், சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்து கொண்டே, நமக்கு தேவையான போது கொஞ்சம் கொஞ்சமாக (Drawdown) எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் கையில் இருக்கும் பணமும் வீணாகாமல், தொடர்ந்து வட்டி மற்றும் லாபத்தை ஈட்டித் தரும். ஓய்வு பெறும்போது, சந்தா செலுத்துபவர்கள் தங்களுக்கு தேவையான பணத்தை இரண்டு வழிகளில் பிரித்து வாங்க விண்ணப்பிக்கலாம்: இது ஒரு இயல்பான (Default) வழிமுறையாகும். இதில் உங்களுடைய வயது மற்றும் நீங்கள் எத்தனை ஆண்டுகள் வரை பணம் பெற விரும்புகிறீர்கள் (உதாரணமாக 85 வயது வரை) என்பதைப் பொறுத்து பண வீதம் முடிவு செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும் உங்களின் பிறந்தநாளின் போது, சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த பணத்தொகை மாற்றி அமைக்கப்படும். உதாரணமாக, 60 வயதில் ஓய்வு பெற்று 85 வயது வரை பணம் பெற விரும்பும் ஒருவருக்கு, ஆரம்பத்தில் 4% என்ற விகிதத்தில் பணம் கிடைக்கத் தொடங்கும். வயது கூடக்கூட இந்த தொகையும் படிப்படியாக உயரும். இ முறையில் உங்களிடம் உள்ள மொத்த மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களும் சமமாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு யூனிட்கள் விற்கப்பட்டு பணம் உங்கள் கணக்கில் வரும். உதாரணமாக, உங்களிடம் 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள யூனிட்கள் (ஒரு யூனிட் விலை ₹10 எனில் மொத்தம் 8 லட்சம் யூனிட்கள்) உள்ளன என்று வைப்போம். நீங்கள் 25 ஆண்டுகள் மாதாமாதம் பணம் பெற விரும்பினால், ஒவ்வொரு மாதமும் சரியாக 2,666.67 யூனிட்கள் விற்கப்பட்டு, அதற்கான அன்றைய சந்தை மதிப்புப் பணம் உங்களுக்கு வழங்கப்படும். அனைவருக்கும் பொருந்தும்: அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள் என அனைத்து NPS சந்தாதாரர்களும் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். பணம் பெறும் காலம்: மாதத்திற்கு ஒருமுறை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை என உங்களின் தேவைக்கேற்ப 85 வயது வரை பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஃபண்ட் மேனேஜரை மாற்றலாம்: இந்த திட்டத்தில் இருக்கும்போதும் உங்களின் பணத்தை நிர்வகிக்கும் பென்ஷன் ஃபண்ட் நிறுவனத்தை இரண்டு நிதியாண்டுகளுக்கு ஒருமுறை நீங்கள் மாற்றிக் கொள்ளும் வசதியும் உண்டு. வயதாகும்போது ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்காக 'RIS Steady' என்ற சிறப்பு வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் வயது அதிகரிக்க அதிகரிக்க, பங்குச்சந்தையில் (Equity) இருக்கும் முதலீடு தானாகவே குறைக்கப்பட்டு, பாதுகாப்பான அரசு பத்திரங்களில் (Government Bonds) முதலீடு மாற்றப்படும். 60 வயதில்: பங்குச்சந்தை (Asset E) - 35%, கார்ப்பரேட் பத்திரங்கள் (Asset C) - 10%, அரசு பத்திரங்கள் (Asset G) - 55% என முதலீடு இருக்கும். 80 வயதிற்கு மேல்: பங்குச்சந்தை முதலீடு 10% ஆக குறைக்கப்பட்டு, பாதுகாப்பான அரசு பத்திர முதலீடு 75% ஆக உயர்த்தப்படும். இதனால் வயதான காலத்தில் உங்களது பணம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். நீங்கள் குறிப்பிட்ட வயது வரை (உதாரணமாக 85 வயது) பணத்தை எடுத்த பிறகும், கணக்கில் மீதமுள்ள தொகை (Residual Corpus) இருந்தால், அதை மொத்தமாக கையில் வாங்கிக் கொள்ளலாம். அல்லது அதை அப்படியே மாதாந்திர பென்ஷன் தரும் திட்டத்தில் இணைத்துக் கொள்ளலாம். பென்ஷன் ஃபண்ட் நிறுவனங்கள் மற்றும் கணக்கு பராமரிப்பு முகமைகள் (CRAs) இதற்கான தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு உள்கட்டமைப்புகளை தயார் செய்த பிறகு, இந்த புதிய விதிகள் அமல்படுத்தப்படும் தேதி தனியாக அறிவிக்கப்படும் என PFRDA தெரிவித்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால், இனி ஓய்வூதியப் பணத்தை எப்போது, எப்படி, எவ்வளவு எடுக்க வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்கும் முழு சுதந்திரத்தை இந்த புதிய 'RIS' திட்டம் வழங்குகிறது!'ரிட்டையர்மென்ட் இன்கம் ஸ்கீம்' (RIS) என்றால் என்ன?
பணம் எடுக்க இரண்டு எளிய வழிகள் (Drawdown Options)
சிஸ்டமேடிக் பேஅவுட் ரேட் (SPR - Systematic Payout Rate):
சிஸ்டமேடிக் யூனிட் ரெடெம்ப்ஷன் (SUR - Systematic Unit Redemption):
யாருக்கெல்லாம் இது பொருந்தும்? இதிலுள்ள கூடுதல் வசதிகள் என்ன?
பாதுகாப்பான முதலீட்டிற்கு 'ஆர்பிஎஸ் ஸ்டெடி' (RIS Steady)
கடைசியாக மிஞ்சும் பணத்தை என்ன செய்யலாம்?
இந்த விதி எப்போது அமலுக்கு வரும்?