முழுமையாக பாடப்பட்ட வந்தே மாதரம் பாடல்.. டென்ஷனான சோனியா காந்தி! காங். அலுவலகத்தில் நடந்தது என்ன?

  • டெல்லி: நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், தேசிய கொடி ஏற்றும்போது முழு வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. அப்போது சோனியா காந்தி பாடலை நிறுத்த வேண்டும் என்று சைகை செய்ததாக.. சோஷியல் மீடியாக்களில் வீடியோ ஒன்று ஷேராகி வருகிறது.

    Advertisement

    சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வந்தே மாதரம் பாடல் குறித்து மசோதா நிறைவேறப்பட்டிருக்கிறது. பாடலை முழுமையாக 6 சரணங்களும் பாடப்பட வேண்டும். ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்த பாடல் முழுமையாக பாடுவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாடலின் முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே மதச்சார்பற்றதாக இருப்பதாகவும்.. அடுத்து வரும் சரணங்களில் இந்து தெய்வங்களை புகழ்ந்து இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

    Advertisement

    இப்படி இருக்கையில்தான் இன்று காலை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான இந்திரா பவனில், தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அப்போது வந்தே மாதரத்தின் முழு சரணங்களும் பாடப்பட்டன. உடனே சோனியா காந்தியும், மல்லிகார்ஜுன கார்கேவும் கைகளை அசைத்து சத்தம் போட்டியிருக்கின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் பரவலாக ஷேராகி வருகின்றன. வீடியோவில், சோனியா காந்தி, கார்கே என்ன சொன்னார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை. இப்படி இருக்கையில்.. இந்த வீடியோக்களை ஷேர் செய்து.. காங்கிரஸ் தலைவர்கள் தேசிய பாடலை அவமதிக்கிறார்கள் என்று பாஜகவினர் விமர்சிக்க தொடங்கினர்.

    தேசிய கீதத்திற்கு இணையான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட பாடலை, காங்கிரஸ் அவமானப்படுத்துகிறது என்று குற்றம்சாட்டினர்.

    Advertisement

    ஆனால் காங்கிரஸ் இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது. கொடியேற்றும் நிகழ்ச்சியில்.. கார்கே நீண்ட நேரமாக நின்றுக்கொண்டிருந்ததாகவும், அவர் உட்கார சேர் கேட்டதாகவும்.. இதற்காக கையை நீட்டி சோனியா காந்தி சைகை செய்திருந்தார் என்றும் காங்கிரஸ் விளக்கமளித்திருக்கிறது. காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் இது குறித்து கூறுகையில்.. வந்தே மாதரம் பாடலை நிறுத்த யாரும் முயற்சிக்கவில்லை என்று விளக்கமளித்திருக்கிறார்.

    சோனியா காந்தி, கார்கே ஆகியோர்.. வந்தே மாதரம் இசைக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது கை நீட்டி பேசிய வீடியோ.. பரவலாக ஷேராகி விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

    English Summary

    Sonia Gandhi: Independence Day was celebrated across the country today. At the Congress headquarters in Delhi, the full *Vande Mataram* song was sung during the national flag hoisting ceremony. A video is currently circulating on social media appearing to show Sonia Gandhi gesturing for the song to be stopped.