துருவ் ரதீ மீதான பழைய கேஸை தூசி தட்டும் பாஜக! 2018 வழக்கில்.. இப்போது சம்மன்!

  • டெல்லி: பிரபல யூடியூபரான துருவ் ரதீ சமீபத்தில் தேர்தல் ஆணையருக்கு எதிராக 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) நடத்திய போராட்டத்தில் பங்கேற்றிருந்தார். இந்நிலையில், கடந்த 2018ல் பதிவான வழக்கில் தற்போது சம்மன் அனுப்ப டெல்லி சாகேத் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

    Advertisement

    கடந்த 2018ம் ஆண்டில் துருவ், தனது யூடியூப் பக்கத்தில் 'BJP IT Cell Part II' என்கிற தலைப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் தனக்கு எதிராக பல பொய்யான மற்றும் தவறான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு விகாஸ் சங்கிருத்யாயன் என்பவர் டெல்லி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    Advertisement

    இந்த வழக்கில் துருவ் ரதீக்கு முதன் முதலில் 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் பொதுவாக ஜெர்மனியில் வசித்து வருவதால் கடந்த பல ஆண்டுகளாக அவருக்கு சம்மனை முறைப்படி கொண்டு சேர்க்க முடியாமல் தாமதம் ஏற்பட்டு வந்தது.

    இந்த வழக்கு முதலில் நவம்பர் 20ம் தேதி விசாரணைக்கு வருவதாக இருந்தது. எனிலும் டெல்லியில் நடைபெறும் CJP போராட்டம் தொடர்பாக துருவ் தற்போது இந்தியாவில் தங்கியிருப்பதாகவும், அவர் ஹரியானாவில் இருக்கும் குடியிருப்பு விவரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் கூறி விசாரணையை முன்கூட்டியே நடத்த கோரி விகாஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    Advertisement

    இந்த வாதத்தை ஏற்ற டெல்லி சாகேத் நீதிமன்றத்தின் முதலாவது வகுப்பு நீதித்துறை நடுவர் ராகுல் ஜெயின் துருவ் ரதி இந்தியாவில் இருக்கும்போதே அவரிடம் சம்மனை விரைவாக ஒப்படைக்க உத்தரவிட்டார். இதன்படி இந்த வழக்கின் அடுத்தக்கடட விசாரணை வரும் அக்.17ம் தேதிக்கு மாற்றப்பட்டு பட்டியலிடப்பட்டிருக்கிறது.

    மேலோட்டமாக பார்க்கும்போது வழக்கு விசாரணைக்கு சம்மன் அனுப்புவது சாதாரணமானதாக இருக்கலாம். ஆனால், டெல்லியில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் இந்த நேரத்தில் 8 ஆண்டுகள் பழமையான வழக்கை தோண்டி எடுப்பது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் விமர்சித்திருக்கின்றனர்.

    English Summary

    Dhruv Rathee: Popular YouTuber Dhruv Rathee recently participated in a protest organized by the Citizens for Justice and Peace (CJP) against the Election Commissioner. Meanwhile, the Saket Court in Delhi has now issued a summons in connection with a case registered back in 2018.