வட இந்தியாவில் ஆதிக்கத்தை இழக்கும் பாஜக? 3 இடத்திலும் அடி.. குஜராத்தில் கூட கஷ்டப்பட்டு தான் வெற்றி

  • டெல்லி: பீகார், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளன. மூன்று தொகுதிகளில் இரண்டில் பாஜக தோல்வியை தழுவுகிறது. குஜராத்தில் மட்டும் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும், அங்கும் வாக்கு வித்தியாசம் கணிசமாக குறைந்துள்ளது. Gen Z மாணவர் போரட்டத்திற்கு பிறகு நடந்த முதல் தேர்தல் என்பதால் இது கவனம் பெறுகிறது.

    Advertisement

    இன்றைய தினம் பீகார், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இந்த 3 மாநிலங்களிலும் பாஜகவே ஆட்சியில் இருக்கும் சூழலில், ஆளும் கட்சியே தேர்தலில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 3 தொகுதிகளிலும் கிடைத்துள்ள முடிவுகள் பாஜகவுக்கு உண்மையில் அதிர்ச்சி கொடுப்பதாகவே இருக்கிறது.

    Advertisement

    பிரசாந்த் கிஷோர்

    பீகாரின் பாங்கிபூர் தொகுதியில் தேர்தல் ஆலோசகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பிரசாந்த் கிஷோர் போட்டியிட்டார். கடந்தாண்டு நடந்த பீகார் சட்டசபை தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்ட போதிலும், அவர் களமிறங்கவில்லை. ஆனால், இந்த தேர்தலில் அவர் நேரடியாக போட்டியிட்டார். தனது முதல் தேர்தலிலேயே பிரசாந்த் கிஷோர் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார். மத்திய பிரதேசத்தின் டாடியா தொகுதியையும் காங்கிரஸ் தக்கவைத்து கொண்ட நிலையில், குஜராத்தின் மஞ்சல்பூர் தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றியைப் பெற்றது.

    பீகார்

    இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது பீகாரின் பாங்கிபூர் தொகுதி தான். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொகுதி பாஜகவின் கோட்டையாக இருந்து வந்தது. பாஜகவை தவிர யாருமே இங்கு 1995க்கு பிறகு வென்றது இல்லை. அதுவும் தற்போது பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினின் தொகுதி இது. அவர் ராஜ்யசபாவுக்கு தேர்வான நிலையில், இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் தான் பாஜக தோல்வி அடைந்துள்ளது.

    Advertisement

    தேர்தல் ஆலோசகராக பல தலைவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற பிரசாந்த் கிஷோர், அரசியல்வாதியாக களமிறங்கிய முதல் தேர்தலிலேயே பாஜக கோட்டையை உடைத்து வெற்றி பெற்றுள்ளார். ஜன் சுராஜ் கட்சிக்கு இந்த வெற்றி முக்கியமானதாக இருக்கும். அதேநேரம் பாஜகவின் முக்கியமான கோட்டை சரிந்து இருக்கிறது.

    மத்திய பிரதேசம்

    மறுபுறம், மத்திய பிரதேசத்தின் டாடியா தொகுதியிலும் பாஜகவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காங்கிரஸ் வேட்பாளர் கன்ஷ்யாம் சிங், பாஜக வேட்பாளர் அஷுதோஷ் திவாரியை விட கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளார்.. கடந்த முறை இந்த தொகுதியில் காங்கிரஸ் தான் வென்று இருந்தது. இருப்பினும், எம்எல்ஏ இருந்த ராஜேந்திர பாரதியின் பதவி ரத்தான நிலையில், இடைத்தேர்தல் நடைபெற்றது. பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளும் தரப்பே வெல்லும் நிலையில், அதை காலி செய்து காங்கிரஸ் வென்றுள்ளது. இது மத்திய பிரதேச அரசியலில் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    Advertisement

    குஜராத்

    குஜராத்தின் மஞ்சல்பூர் தொகுதியில் மட்டும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் சதீஷ் பட்டேல், காங்கிரஸ் வேட்பாளர் பிகாபாய் ரபாரியை சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஆனால், அதிலும் கூட வாக்கு வித்தியாசம் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 2022 பொது தேர்தலிலேயே பாஜக இந்த தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், இந்த முறை வெறும் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே பாஜக வென்றுள்ளது. இந்த தொகுதியில் பாஜகவின் குறைந்தபட்ச வாக்கு வித்தியாச வெற்றி இதுவாகும்!

    Advertisement

    உணர்த்துவது என்ன!

    இந்த மூன்று இடைத்தேர்தல் முடிவுகள் அரசியல் ரீதியாக பல விஷயங்களை நமக்கு உணர்த்துகிறது. குறிப்பாக பாங்கிபூரில் பாஜக கோட்டையை உடைத்த பிரசாந்த் கிஷோரின் வெற்றி, பீகார் அரசியலில் அவரை தவிர்க்க முடியாத தலைவராக மாற்றியுள்ளது. இந்த வெற்றி அவருக்கு அரசியலில் அரங்கில் கிடைத்துள்ள முதல் அங்கீகாரமாக இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வென்றுள்ள நிலையில், குஜராத்திலும் தனது வாக்கு வங்கியை அதிகரித்துள்ளது.

    Gen Z மாணவர் போரட்டத்திற்கு பிறகு நடந்த தேர்தல் என்பதால் இது தேசியளவில் கவனம் பெறுகிறது. பாஜகவுக்கு இந்த முடிவுகள் ஒரு அரசியல் எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.

    English Summary

    BJP suffers setbacks in key assembly bypolls, losing Bankipur in Bihar and Datia in Madhya Pradesh(இடைத்தேர்தலில் பாஜகவுக்கு அடுத்தடுத்து விழுந்த அதிர்ச்சி): From MP to Bihar BJP Setback in tamil.